சண்டையால் மயூரா பயந்து நடுங்க பாக்கியா அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மயூரா படிக்கட்டில் உட்கார்ந்திருக்க பாக்கியா மயூவை பார்க்க மயூ பாக்யாவை பார்க்க இருவரும் எதுவும் பேசாமல் இருக்கின்றனர். பிறகு பாக்கியா கிச்சனுக்கு சென்று விடுகிறார். பிறகு மயூ கிச்சனை எட்டிப் பார்க்க அந்த சமயம் பார்த்து கோபியும் ராதிகாவும் மாடியில் சண்டை போட அந்த சத்தம் கேட்டு மயூரா பயந்து நடுங்குகிறார்.
பிறகு பாக்கியா மயூவை சமாதானம் செய்து அழைத்து வந்து உட்கார வைத்து சாப்பிட ஸ்னாக்ஸ் கொடுக்க அங்கு வரும் ஈஸ்வரி என்ன பண்ற? என சத்தம் போட பாக்யா அவ குழந்தை அவ என்ன பண்ணுவா என சமாதானப்படுத்த என்னமோ பண்ணு என கோபப்பட்டு ஈஸ்வரி ரூமுக்கு சென்று விடுகிறார்.
பிறகு ஜெனி பாட்டு கேட்டுக் கொண்டிருக்க செழியன் வந்து உட்கார என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டா என கேட்க செழியன் அந்த லேடி கிளைன்ட் பற்றி பேசி வருத்தப்படுகிறார்.
அதன் பிறகு கோபி, ராதிகா, மயூ ரூமில் இருக்க அப்போது கோபி மயூவுக்கு கணக்கு சொல்லி கொடுக்க அப்போது இனியா படிக்க கோபி ரூமுக்கு வர ராதிகா அவர்களை வெறுப்பேத்த இனியா கோபத்துடன் வெளியே வருகிறார்.
இந்த விஷயம் தெரிய வந்ததும் ஈஸ்வரி இனியாவை கூட்டிச் சென்று மயூவை எழ வைத்து இனியாவை கோபி பக்கத்தில் உட்கார வைத்து நீ இவளுக்கு மட்டும் தான் சொல்லிக் கொடுக்கணும் என ஆர்டர் போட கோபி எதுவும் செய்ய முடியாமல் நிற்க ராதிகா கோபப்பட்டு வெளியே செல்கிறார்.
அதன் பிறகு பாக்கியா கிச்சனில் இருக்க ராதிகா கோபமாக வந்து இதெல்லாம் உங்க வேலை தானேனு சத்தம் போட பாக்கியா அத்தை ஏதாவது சொன்னாங்களா? அவங்க கிட்ட உங்க கோபத்தை காட்ட முடியாம என்கிட்ட வந்து காட்டிகிட்டு இருக்கீங்க, நீங்க பண்றது எல்லாத்துக்கும் என்னால பதில் சொல்ல முடியும், பதிலடி கொடுக்க முடியும் ஆனால் அதெல்லாம் பண்ண மாட்டேன். ஏன்னா நீங்க பண்ற எதையும் நான் ஒரு விஷயமாகவே பாக்குறது கிடையாது என சொல்ல ராதிகா பல்பு வாங்குகிறார்.
இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.