
கோபி சொன்ன வார்த்தைகளால் சாகத் துணிந்துள்ளார் இனியா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ராதிகா கேன்டீனுக்கு வர செல்வி மற்றும் பாக்யா என இருவரும் குட் ஈவினிங் மேடம் என சொல்கின்றனர். உங்களுக்கு ஈவினிங் ஆயிடுச்சுன்னு தெரியுதா அதெல்லாம் இருக்கட்டும் கேக் ரெடியா என கேட்க பாக்கியாவும் செல்வியும் கேக் செய்ய முயற்சி செய்து வராதது போல திரும்பவும் நடிக்கின்றனர்.

மேலும் இன்னும் இரண்டு நாள் மட்டும் டைம் கொடுங்க என கெஞ்ச ராதிகா அதெல்லாம் வாய்ப்பே கிடையாது நீங்க கேன்டீனை காலி பண்ணுங்க, போகும்போது நான் கேன்டீன் பொருட்கள் எல்லாத்தையும் செக் பண்ணுவேன். டேமேஜ் ஏதாவது இருக்கான்னு பார்ப்பேன், இப்ப ஃப்ரீயா தான் இருக்கேன் இப்பவே பார்க்கிறேன் என உள்ளே போகிறார்.
உள்ளே போன ராதிகா அங்கே விதவிதமான கேக்குகள் தயார் நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். என்ன மேடம் ஒரு கேக்குக்காக இவ கேண்டின காலி பண்ணிட்டு கிளம்பிடுவானு நினைச்சீங்களா? உங்கள மாதிரி படிச்சு நாலு பேரோட வழிகாட்டுதலோடு நான் இங்க வரல எதுவுமே இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டு போராடி இங்க வந்திருக்கேன். சாதாரண ஒரு கேக்குக்காக மூட்டையை கட்டிக்கிட்டு கிளம்பிட மாட்டேன் என சொல்லி ராதிகாவுக்கு பல்பு கொடுக்கிறார்.

உடனே ராதிகா இதெல்லாம் எந்த கடையில வாங்கி வந்தீங்க என கேட்க இப்படி சில்ற தனமா கேள்வி கேட்காதீர்கள் என கேக் செய்யும் முறையை சொல்லி ஷாக் கொடுக்கிறார் பாக்கியா. கேக்க சாப்பிட்டு பாருங்க என பாக்யா சொல்ல ராதிகா இவ்வளவு நேரம் கேக் செய்ய வரலைன்னு என்கிட்ட நடிச்சீங்களா என கோபப்பட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
அதன் பிறகு வீட்டில் இனியா போன் பார்த்துக் கொண்டிருக்க ராதிகா போதும் போனை வச்சுட்டு தூங்கு என சொல்ல இனியா வழக்கம் போல எதிர்த்து பேச கோபி நீ எதுக்கு எது சொன்னாலும் அவளை எதிர்த்து பேசிக்கிட்டு இருக்க என கேள்வி கேட்க இனியா நீங்களும் என்னை திட்டுறீங்க என அழுகிறார். கோபி நானும் ஆரம்பத்திலிருந்து பாத்துக்கிட்டே தான் இருக்கேன் நீ அவ எது கேட்டாலும் பொறுமையா பதில் சொல்ல மாட்ற என சொல்லி போன வச்சுட்டு போய் தூங்கு என சொல்ல இனியா அழுது கொண்டே வெளியே செல்கிறார்.

அதன் பிறகு வீட்டில் எல்லோரும் தூங்கிய பிறகு டாடி ரொம்ப மாறிட்டாரு, இனி என்னால அங்கேயும் போக முடியாது இங்கேயும் இருக்க முடியாது என அழும் இனியா தாத்தா ராமமூர்த்தி சாப்பிடும் மாத்திரை எடுத்து போட்டுக் கொள்கிறார். பிறகு கொஞ்ச நேரத்தில் இனியாவுக்கு பயம் வந்துவிட தாத்தாவை எழுப்பி விஷயத்தை சொல்ல பதறும் ராமமூர்த்தி கோபி ராதிகாவை எழுப்பி இனியாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார்.

ஹாஸ்பிடலுக்கு வந்ததும் ராமமூர்த்தி பாக்யாவுக்கு போன் போட்டு இனியா மாத்திரை சாப்பிட்டு ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்ல பாக்யா பதறி துடிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.