தனத்துடன் ராதிகா வீட்டிற்கு சென்றுள்ளார் பாக்கியா. இதனால் கோபி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Baakiyalakshmi and Pandian Stores Episode Update 12.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய சீரியல்கள் சங்கம் என்ற பெயரில் இணைந்து ஒரு மணி நேர எபிசோடுகளாக ஒளிபரப்பாகி வருகின்றன.

தனத்துடன் ராதிகா வீட்டிற்குச் சென்ற பாக்கியா.. கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

இன்றைய எபிசோட்டில் கோபி மூர்த்தி ஆகியோர் வாக்கிங் செல்ல அங்கு நோட் கோபிக்கு இரவு நேரத்தில் போன் பேச வேண்டாம் என சில அறிவுரைகளை வழங்குகிறார். ஆரம்பிச்சுட்டாரு என கோபி கடுப்பாகிறார்.

பிறகு இந்த பக்கம் தனம் மற்றும் பாக்கியா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்க அப்போது மாமாவின் பிறந்தநாளுக்கு சிலரை கூப்பிடவேண்டி இருக்கு நீயும் வர தானே என கேட்க போகலாம் வரேன் என தனம் சொல்கிறார். இந்த நேரத்தில் ஈஸ்வரி வந்து உட்காந்து முல்லை பற்றி விசாரிக்கிறார் அப்போது இங்கே பக்கத்தில் ஒரு கோவில் இருக்கு அங்கே போய் சும்மா சாமிகிட்ட வேண்டிகிட்டு வரட்டும் கண்டிப்பா நல்லது நடக்கும் என கூறுகிறார்.

அதன் பிறகு இவர்கள் முல்லையையும் கதிரையும் அழைத்து கோவிலுக்கு போயிட்டு வருமாறு கூறுகின்றனர். எழில் இவர்களை கோவிலுக்கு அழைத்துச் செல்ல அப்போது அங்கு அமிர்தா வந்திருக்க அவரை கதிர் முள்ளை ஆகியோருக்கு அறிமுகம் செய்கிறார். அப்போது கதிர் அமெரிக்காவின் கணவர் பற்றி கேட்க பிறகு எனில் அவர் இல்லை என சொல்கிறார். பிறகு அமிர்தாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றனர். அமிர்தா கிளம்பிய பிறகு முல்லை நமக்குத்தான் பிரச்சனைனு பார்த்தா இன்னும் இதைவிட பெரிய பிரச்சனையோடு வர்றவங்க எல்லாம் இருக்காங்க என கூறுகிறார். இப்போதாவது உனக்கு இது புரிந்ததே என சந்தோஷப்படுகிறார் கதிர்.

இந்த பக்கம் மூர்த்தி மற்றும் ஜீவா ஆகியோர் சாப்பிட வந்து உட்கார அந்த நேரத்தில் கோபியும் வருகிறார். இவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து விட்டு எஸ்ஸாக நினைக்க மீனா கோபியை கூப்பிட்டு சாப்பிட உட்கார வைக்கிறார். ஒரே ஒரு இட்லி போதும் என சொல்ல மீனா இதெல்லாம் என்ன பத்தும் என மூன்று இட்லி வைத்து சாப்பிடச் சொல்கிறார்.

தனத்துடன் ராதிகா வீட்டிற்குச் சென்ற பாக்கியா.. கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

பிறகு கண்ணன், ஐஸ்வர்யா, இனியா, செல்வி ஈஸ்வரி அவருடைய கணவர் என எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது மீனாவும் ஐஸ்வர்யாவும் மாறி மாறி கலாய்த்து கொள்கின்றனர். பிறகு செல்வி கண்ணனிடம் ஐஸ்வர்யா கிட்ட என்ன புடிச்சு போய் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்ட எனக் கேட்க கண்ணன் அதைத்தான் ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருக்கேன் ஆனா என்னனு தெரியல என சொல்ல ஐஸ்வரியா வீட்டுக்கு வா உனக்கு இருக்கு என மிரட்டுகிறார். பிறகு மீனா ஐஸ்வர்யாவை புகழ்ந்து பேசுகிறார்.

அதன் பின்னர் தனம் மற்றும் பாக்கியா ஆகியோர் ராதிகாவின் வீட்டிற்கு வந்து உள்ளனர். ராதிகாவை தன்னுடைய மாமனாரின் பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கிறார் பாக்கியா. மேலும் மயூர் மட்டுமில்லாமல் கட்டிக்க போறவரையும் அழைச்சிட்டு வாங்க என பாக்கியா சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பின்னர் வெளியான புரோமோ வீடியோவில் ராதிகா டீச்சர் வந்து கூப்பிட்டாங்க நாம ரெண்டு பேரும் அந்த ஃபங்ஷனுக்கு போகலாம் என கூறுகிறார். இதனால் கோபி அதிர்ச்சி அடைகிறார்.