பாக்கியலட்சுமி சீரியலில் அதிரடித் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

Baakiyalakshmi and Pandian Stores Episode Update 23.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியல்கள் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வந்தன. மெகா சங்கமம் கடைசி நாளான இன்று விறுவிறுப்புடன் சீரியல் நடந்து முடிந்துள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலில் அதிரடி திருப்பம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் செய்த வேலை - மெகா சங்கமம் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இன்றைய எபிசோடில் கோபி மற்றும் மூர்த்தி ரூமுக்குள் பேசிக்கொள்ள அப்போது கோபி எனக்கு அட்வைஸ் செய்ய நீங்க யாரு என சத்தம் போட இதைக் கேட்டு குடும்பத்தினர் அனைவரும் ஓடி வந்து கதவைத் தட்ட பிறகு கோபி கதவைத்திறந்து வெளியே வருகிறார். என்னாச்சு என எல்லோரும் கேட்க எனக்கு அட்வைஸ் பண்ண இவன் யாரு? ரெண்டு நிமிஷம் டைம் தரேன் எல்லோரும் அங்கிருந்து கிளம்பியாகணும் என கூறுகிறார். என்னாச்சு என கேட்க கோபி அமைதியாகவே இருக்க மூர்த்தி அதை நான் சொல்றேன் அத்தை என சொல்ல அதிர்ச்சி அடைகிறார். இந்த மலைக்கும் செஞ்சிக்கிட்டு இருக்க வேலை என வாயைத் திறக்க தனம் வேண்டாம் மாமா என தடுத்து நிறுத்துகிறார்.

பிறகு சூடு சொரணை எல்லாம் இருந்தா வீட்ட விட்டு வெளிய போங்க என கோபி சொல்லிவிட்டு மேலே சென்று விட வீட்டில் உள்ளவர்கள் கோபி பேசியதற்காக மாறி மாறி மன்னிப்பு கேட்கின்றனர். பிறகு கோபியின் அப்பா கண்கலங்கி வருத்தப்பட மூர்த்தி எப்போதும் உங்களுக்கு நாங்கள் இருப்போம் கவலைப்படாதீங்க என ஆறுதல் கூறுகிறார். பிறகு எல்லோரும் வெளியில் கிளம்பி செல்ல மூர்த்தியிடம் மீண்டும் கோபியிடம் பேச வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் அதிரடி திருப்பம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் செய்த வேலை - மெகா சங்கமம் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன் பிறகு ரூமுக்கு வந்த மூர்த்தி இவ்வளவு விஷயம் தெரிந்தும் வீட்டில யார்கிட்டயும் எதுவும் சொல்லாமல் போறேன்னு சந்தோஷப்படாதீங்க. பார்பி அக்காவிற்கு ஏதாவது ஒண்ணுன்னா நாங்க சும்மா இருக்க மாட்டோம் தம்பி எங்க நாலு பேர் இருக்கோம். பாசத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவோம் பாக்கிய அக்காவுக்கு துரோகம் பண்ண நினைச்சா உங்கள சும்மா விடமாட்டோம் என கூறுகிறார். ராதிகா கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லி விட்டு ஒழுக்கமா இருக்க பாருங்க என கூறுகிறார்.

பிறகு தனம் பாக்கியாவை தனியாக அழைத்துச் சென்று எதுக்கும் கவலைப்படாதீங்க என்ன நடந்தாலும் உங்களுக்கு போன் பண்ணுங்க நாங்க எல்லோரும் வந்து நிற்போம். ஆனா உங்கள இப்படியே விட்டுட்டு போறேன் நீ நெனச்சாதான் கஷ்டமா இருக்கு என தனம் கண் கலங்குகிறார். பாக்கியா என்னாச்சு என்ன பிரச்சனை எனக் கேட்க எதுவும் சொல்லாமல் கிளம்பிச் செல்கிறார்.

பிறகு நேராக மூர்த்தி மற்றும் தனம் இருவரும் ராதிகா வீட்டிற்கு செல்கின்றனர். மூர்த்தி ராதிகாவிடம் எல்லா உண்மையையும் சொல்லி விட வேண்டும் என முடிவு செய்ய தனம் எதுவும் சொல்ல வேண்டாம் அவங்க எப்படி எடுத்துக் கொள்வது நமக்கு தெரியாது என சொல்ல மூர்த்தி கோபப்படுகிறார். பிறகு ராதிகா வீட்டு கதவைத்தட்டி நீங்க நினைக்கிற மாதிரி கோபி நல்லவர் கிடையாது. அவர் உங்ககிட்ட என்ன சொல்லி இருக்கார்னு எங்களுக்கு தெரியல ஆனா அவர் சொன்ன எல்லாமே பொய்தான் கோபி பற்றி எல்லா விஷயத்தையும் சொல்ல முற்படுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் அதிரடி திருப்பம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் செய்த வேலை - மெகா சங்கமம் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

உடனே தனம் இதனை தடுத்து நிறுத்தி நீங்க வாழ்க்கையில ஏற்கனவே நிறைய கஷ்டப்பட்டுட்டீங்க திரும்பவும் கஷ்டப்படக் கூடாது. கோபியோட குடும்பத்தை முதலில் பார்க்கணும்னு சொல்லுங்க அதுக்கப்புறம் உங்களுக்கு எல்லாமே புரியும். அவங்கள பார்த்ததுக்கு பிறகு நீங்க என்ன வேணாலும் முடிவு பண்ணுங்க. குழந்தை பக்கத்துல இருக்கு. அதனால என்னால இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியல. கோபி உங்களுக்கு எப்படி தெரியும் அவரைப்பற்றி எதுக்கு இப்படி எல்லாம் சொல்றீங்க என கேட்க அவரை எங்களுக்கு ரொம்ப நல்லா தெரியும். அவங்க குடும்பம் உங்கள் இரண்டு பேரையும் அவர் ஏமாத்திகிட்டு இருக்காரு. அவங்க புத்திசாலி மாமா புரிஞ்சுபாங்க வாங்க நாம கிளம்பலாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

இவர்கள் சொன்னதைக் கேட்டு பாக்கியா ஒரு பக்கம் யோசனையில் இருக்க மூர்த்தி எச்சரிக்கையால் கோபி ஒரு பக்கம் யோசனையில் இருக்க ராதிகாவை என்ன நடக்கிறது என தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் சீரியல் எபிசோட் முடிவடைகிறது.