கோபிக்கு பெரிய ஆப்பு வைத்துள்ளார் மூர்த்தி.

Baakiyalakshmi and Pandian Stores Episode Update 21.05.22 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்கள் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த இரண்டு சீரியல்களில் தற்போது மெக்கா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன.

இன்றைய எபிசோட் இன் ராதிகா வீட்டிற்குச் சென்ற மூர்த்தி தனம் நீங்க கட்டிக்கப்போற அவருடைய போட்டோ இருக்கா என கேட்க அவர் கோபியின் போட்டோவை எடுத்து காண்பிக்க அதை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சா எனக் கேட்க கல்யாணம் ஆகிடுச்சு அவரும் டிவோர்ஸ் பண்ணபோறாரு, அடுத்த மாசம் கிடைத்துவிடும் அதுக்கப்புறம் சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கப் போறோம் என சொல்கிறார்.

இதைக் கேட்டு வீட்டுக்கு வந்த இருவரும் என்ன செய்வது என தெரியாமல் குழம்பிக்கொண்டு இருக்க தன் அம்மாவிடம் பேச அப்போது பாக்கியா கோபியில் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் இருக்கு இப்போ எனக்கு ரொம்ப பயமா இருக்கு என கூறுகிறார். அவருக்கு வேற யாரோட தொடர்பு இருக்குனு நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல என கூறுகிறார். செல்வி தான் அவரை ஏதோ பொம்பளையோட பார்த்ததா சொல்லி அடிக்கடி சொல்லிட்டே இருக்கா என கூறுகிறார். கோர்ட்டுக்கு கூட்டிக் கொண்டு தன்னிடம் கையெழுத்து வாங்கி விஷயத்தைச் சொல்கிறார் அங்கே எல்லோரும் விவாகரத்து கேட்டு தான் வந்து இருந்தாங்க என கூறுகிறார்.

பிறகு தனம் பாக்கிய அன்னைக்கு தெரியாம கோபி டிவேர்ஸ் வாங்க முயற்சி பண்ணி இருக்காரு என சொல்ல இதைக் கேட்டு மூர்த்தி அதிர்ச்சி அடைகிறார். அதன் பின்னர் எல்லோரும் ஊருக்கு கிளம்பி தயாராக இருக்க அப்போது கோபி கீழே இறங்கி வந்து எல்லோரும் கிளம்பிட்டீங்களா பார்த்து போய்ட்டு வாங்க என சொல்ல அந்த நேரத்தில் மூர்த்தி உங்களிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும் என சொல்லி ரூமுக்கு அழைத்துச் செல்கிறார்.

ரூமுக்குள் சென்றோம் உயர்த்தி கோபியை சரமாரியாக கேள்வி கேட்கிறார் ராதிகா எல்லா விசயத்தையும் சொல்லிடாங்க உங்களுக்கு எப்படி பாக்யாவுக்கு துரோகம் பண்ண மனசு வருது என கேட்கிறார். இதல்லாம் கேட்க நீ யாரு உனக்கு யாரு அதிகாரத்தைக் கொடுத்தது என கோபி கேட்க தப்பு யார் வேணாலும் தட்டிக் கேட்கலாம் என சொல்கிறார்.

கோபிக்கு பெரிய ஆப்பு வைத்த மூர்த்தி.. மொத்த குடும்பத்துக்கும் காத்திருந்த அதிர்ச்சி - பரபரப்பான பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் அப்டேட்.!!

அதன் பின்னர் ராதிகா எல்லா விசயத்தையும் சொல்லிடாங்க அவங்ககிட்ட நாங்க எல்லா உண்மையையும் சொல்லி இருந்தா என்ன நடந்திருக்கும்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க என கூறுகிறார். பாக்கி அக்காவை ஏமாத்தி டிவோர்ஸ் நாங்க பார்த்து இருக்கீங்க இது எல்லாம் வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் சொன்னா இந்த குடும்பம் என்னாகும்னு நெனச்சு பாத்தீங்களா என கேட்க பொய் சொல்லுங்க அப்பவாவது இதுக்கு ஒரு முடிவு கிடைக்கும் என கூறுகிறார்.

ராதிகா கிட்ட பாக்கியா தான் என் பொண்டாட்டி நீ உங்களால உண்மைய சொல்ல முடியுமா அசிங்கமா இல்லை என மூர்த்தி சொல்ல உனக்கு அவ்வளவு தான் மரியாதை என கோபி சத்தம் போடுகிறார். பாக்கியா மை எப்படி பார்த்துக் கொண்டோம் என்று எனக்கு தெரியும் நீ எனக்கு அட்வைஸ் பண்ணாத என கூறுகிறார். இவர்களின் சத்தம் கேட்டு எல்லோரும் ஓடி வந்து கதவைத் தட்ட கதவை திறந்து உண்மையை சொல்லட்டுமா என மூர்த்தி கேட்க சொல்லுங்க என கோபி கூறுகிறார்.

இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர் மகாசங்கம் எபிசோட் முடிவடைகிறது. அதன் பின்னர் வெளியான புரோமோ வீடியோவில் மூர்த்தி கிட்ட போக பாட்டு அளவுக்கு அப்படி என்ன பிரச்சனை என ஈஸ்வரி கேட்க அதை நான் சொல்றேன் அத்தை என மூர்த்தி பேசத் தொடங்குகிறார். அதன் பிறகு தனுஷ் மற்றும் மூர்த்தி இருவரும் ராதிகா வீட்டிற்குச் சென்று நீங்க நினைச்சுட்டு இருக்க மாதிரி கோபி நல்லவர் கிடையாது என கூறுகிறார்.