ராதிகாவுடன் டிராமா போட்டு ஒரு வழியாக தப்பியுள்ளார் கோபி.

Baakiyalakshmi and Pandian Stores Episode Update 17.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த செய்திகள் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் குழுவோடு இணைந்து மெகா சங்கமம் என்ற பெயரில் ஒரு மணி நேரம் எபிசோட் ஒளிபரப்பாகி வருகிறது.

ராதிகாவிடம் டிராமா போட்டு ஒரு வழியாக தப்பித்த கோபி.. கடைசியில் வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர் மெகா சங்கமம் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இன்றைய எபிசோட்டில் கோபியின் அப்பாவுக்கு வாய் சரியாக இருப்பதை பார்த்து குடும்பத்தார் மகிழ்ச்சி அடைந்து ஒவ்வொருத்தராக அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கின்றனர். ஈஸ்வரி அவருக்கு குணமான சந்தோஷத்தில் கண் கலங்குகிறார்.

பிறகு குழந்தைகளுக்கு அவர்கள் எடுத்து வைத்திருந்த மோதிரத்தை எடுத்து கொடுக்கின்றனர். அதன்பிறகு மொட்டை மாடியில் இல்லை தனியாக வீடியோ பார்த்து சிரித்துக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்த கதிர் தனியாக சிரிப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். பிறகு முல்லை இனிமே எதற்காகவும் எதைப்பற்றியும் நினைத்து கவலைப்பட போவதில்லை. ஜெனி, செல்வி அக்கா, அமிர்தா என எல்லோருக்கும் என்னை விட பெரிய பிரச்சனை இருக்கிறது ஆனால் அவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். நானும் இனிமேல் சந்தோஷமாக இருக்க போகிறேன் நடப்பதெல்லாம் நடக்கும்போது நடக்கட்டும் என கூறுகிறார். இதைக் கேட்ட கதிர் சந்தோஷம் அடைகிறார். பிறகு எழில் வர அவரிடம் காதல் கதை குறித்து கேட்கிறார் கதிர். எழில் அமிர்தா குறித்து கூற முல்லை அவரை பாராட்டுகிறார்.

ராதிகாவிடம் டிராமா போட்டு ஒரு வழியாக தப்பித்த கோபி.. கடைசியில் வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர் மெகா சங்கமம் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் கோபி ராதிகா வீட்டிற்குச் சென்று நைட்டில் திடீரென தனக்கு நெஞ்சுவலி வந்து விட்டது துணைக்கு யாரும் இல்லை நானே தைரியமாக காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்று விட்டேன் என சொல்லி டிராமா போடுகிறார். இன்னைக்கு சாயங்காலம் என்னோட பிரெண்ட் பெரிய காடலிஸ்ட் டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கிறார் அவரை பார்க்க போகிறேன் என சொல்கிறார். உடனே ராதிகா நீங்க உங்க ஃப்ரெண்டோட டாக்டர போய் பாருங்க டீச்சர் வீட்டுக்கு நான் போயிட்டு வரேன் என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். கூகுள் சாயங்காலம் ராதிகா வரும் போது எப்படி சமாளிப்பது என யோசித்து குழம்புகிறார்.

இந்த பக்கம் வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். பிறகு கோபி வீட்டுக்கு வர பாக்கியா அவரை மாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுங்கள் எனக் கூட்டிச் சென்று விடுகிறார். பிறகு கோபி இங்கே போய் நிற்க காலில் விழுந்து வாழ்த்து சொல்லுங்கள் எனக் கண்ணன் பிடித்து தள்ளிவிட பிறகு கோபி தன்னுடைய அப்பாவின் காலில் விழுந்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ஆசீர்வாதம் வாங்குகிறார். அதன் பின்னர் கோபி மேலே வந்து விடுகிறார்.

பிறகு கோபி மேலே இருந்து கீழே வந்து ராதிகா வரும்போது எப்படித் தப்பிப்பது என்று யோசிக்க அப்போதே பாக்கியா கோபியுடன் இருக்கும் போட்டோ இனியா கோபியுடன் இருக்கும் போட்டோ சுவற்றில் மாட்டப்பட்டிருந்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சீரியல் எபிசோடு முடிவடைகிறது.

ராதிகாவிடம் டிராமா போட்டு ஒரு வழியாக தப்பித்த கோபி.. கடைசியில் வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர் மெகா சங்கமம் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் கோபி உட்பட எல்லோரும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருக்க ராதிகா மயூராவுடன் வந்து இறங்குகிறார். இதனால் கோபி அதிர்ச்சி அடைகிறார்.