பாக்கியா சொன்ன வார்த்தையால் எழில் முடிவு ஒன்றை எடுக்க உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ஈஸ்வரியும் எழிலும் பேசிக் கொண்டிருக்க பாக்யா நீ வீட்டை விட்டு வெளியே போ எழில் என்று சொல்கிறார். அனைவரும் வேண்டாம் என்று தடுத்தும் பாக்யா முடிவில் உறுதியாக இருக்கிறார். அப்பவும் ஈஸ்வரி அமிர்தாவையே குறை சொல்லி திட்டுகிறார். பாக்யா உனக்கு நான் சொல்றது புரியலையா நீ வீட்டை விட்டு வெளியே போனு சொல்ற என்று மறுபடியும் எழிலை சொல்லுகிறார். ராமமூர்த்தி யாரும் எங்கும் போகத் தேவையில்லை என்று ஈஸ்வரியை அடக்கி ரூமுக்குள் கூட்டி செல்கிறார்.
மறுபக்கம் ஈஸ்வரிக்கும் ராமமூர்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அவ என்ன பேசினப்போ யாரும் எதுவும் கேட்கல ஆனா நான் பேசுவது தான் தப்பு என்று ராமமூர்த்தியிடம் சொல்லி அழுகிறார் ஈஸ்வரி.
ஈஸ்வரி, பாக்யா சொன்னதை நினைத்து யோசித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் பாக்யாவிடம் செழியன் ,ஜெனி இனியா என அனைவரும் போக வேண்டாம் என்று சொல்லுங்கள் ,நீங்க சொன்ன எழில் போக மாட்டான் என சொல்லுகின்றன.
அமிர்தா எழிலிடம் வந்து மன்னிப்பு கேட்க நீ எந்த தப்பும் பண்ணல, என்னால தான் எல்லா பிரச்சனையும் என்று சொல்கிறார். செழியன் பாக்யாவிடம் கெஞ்சி கேட்டும் பாக்யா எதுவும் பேசாமல் இருக்க ஈஸ்வரி ஒரு பக்கம் வீட்டை விட்டு வெளியே எழில் போகக்கூடாது என்று நினைத்து வருத்தப்படுகிறார்.
எழில் எடுத்த முடிவு என்ன? குடும்பத்தினர் என்ன சொல்லப் போகிறார்கள்?என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.