பாக்கியா சடங்குகளை செய்ய கோபி அதிர்ச்சியாகியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி கோபி சடங்கு செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க, கோபி ஈஸ்வரி காலில் விழுந்து கெஞ்சுகிறார். ஆனால் ஈஸ்வரி பிடிவாதமாக இருக்க, யார் தான் செய்யப் போறாங்க என்று கேட்கின்றனர்.
ஈஸ்வரி என் மருமக பாக்யா தான் எல்லாத்தையும் செய்வா என்று சொல்ல, கோபி அதிர்ச்சியாகி நிற்கிறார். உடனே கோபி கோபப்பட்டு யாருக்காகவோ என்னோட உரிமையை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் நான் சடங்கு செய்யலைன்னா என்னோட அப்பாவோட பாடிய எடுக்க விடமாட்டேன் என்று பேசுகிறார்.
ஈஸ்வரி,கோபி விட்டுட்டு போன பிறகு இவ பசங்களையும், எங்களையும் விட்டுட்டு எப்பயோ போயிருக்கலாம் ஆனா அவ அப்படி போகல எங்க எல்லாரையும் ஒரு தாய் பாசத்தோட அரவணைச்சுக்கிட்டா. அவளோட உயிருக்கு உயிரா இருந்த பிள்ளையை வீட்டை விட்டு போய் மூணாவது நாளே அவளோட மாமனார் பிறந்த நாளை கொண்டாடினா, எனக்கு இருக்கிற ஒரு சந்தோசம் நேத்து 80 வது பிறந்த நாள்ல அவர் எல்லாரையும் பார்த்து சந்தோஷப்பட்டு நிறைவாய் இருந்தாரு அந்த ஒரு சந்தோஷத்தை கொடுத்தது பாக்யா மட்டும்தான் என்று சொல்லுகிறார். உடனே ராமமூர்த்தி பக்கத்தில் உட்கார்ந்து நீங்க சொன்ன வார்த்தையை நான் எப்பாடுபட்டாவது காப்பாத்துவங்க என்று சொல்லி அழுகிறார்.
கோபி ஒத்துக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்க பழனிச்சாமி அவரை வெளியே கூட்டிக்கொண்டு நடந்ததை பற்றி எடுத்து சொல்லுகிறார். உடனே ராதிகா அவரை தனியாக அழைத்து சென்று பேசுகிறார். இப்போதைக்கு நீங்க எந்த பிரச்சனையும் பண்ணாதீங்க அவங்க விருப்பப்படி நடக்கவிட்ருங்க, இந்த இடத்திலேயே வந்து நீங்க பிரச்சினை பண்ண தான் இருக்க வேண்டாம் என்று ராதிகா சொன்ன கோபி அதெல்லாம் என்னால விட்டுக் கொடுக்க முடியாது என்று மறுபடியும் ஈஸ்வரி இடம் பேசப்போகிறார். ஆனால் ஈஸ்வரி பாக்யாவிடம் நீ உன் மாமா மேல மரியாதையும் அக்கறையோ வச்சிருந்தா அவரோட ஆத்மா சாந்தி அடையனும்னு நினைச்சேனா நீ போய் நீர் மாலை எடுத்துவிட்டு வா என்று சொல்லுகிறார். பாக்யாவும் நீர் மாலை எடுக்க செல்கிறார்.
நீர் மாலை எடுக்க பாக்யா செல்ல அடுத்த நடக்கப்போவது என்ன? என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.