பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகப் போவதாக பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். இவரது நடிப்பிற்கென தனி ரசிகர்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.
ஏற்கனவே சீரியலில் ராமமூர்த்தி என்ற கதாபாத்திரம் இறந்து விட்டதாக சில வாரங்களுக்கு முன் சோகமாக கதை நகர்ந்து வந்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி கோபி பாக்கியாவை பழிவாங்கும் திட்டம் போடும் கதைக்களத்தில் நகர்ந்து வருகிறது.
இந்நிலையில் கோபி, புகைப்படத்துடன் ஒரு பொய்யை முத்தமிடுவதை விட உண்மையிடம் அரை வாங்கிக் கொள்ளலாம் என்ற பதிவை வெளியிட்டு அதில் பாக்யலட்சுமி தொடரை விட்டு நான் விலகும் தருணம் நெருங்கி விட்டது என்று பதிவிட்டுள்ளார். இதனால் கோபி ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.