கோபி சொன்ன வார்த்தையால் ராதிகா ஷாக் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல்ல இன்றைய எபிசோடு பாக்கியா குடும்பத்தோடு பிரின்ஸ்பலிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சுகிறார்கள். கடைசியாக இனியாவிற்கு வார்னிங் கொடுத்து காலேஜில் அனுமதிக்கிறார்கள். பிறகு காலேஜுக்கு வந்த கோபி பிரின்சிபல் கொடுத்த அட்வைஸில் கடுப்பாகிறார்.
பிறகு இனியாவை சந்தித்து அட்வைஸ் செய்து ஆறுதல் கூறி எதுவாக இருந்தாலும் கால் பண்ண சொல்லி அனுப்பி வைக்கிறார்.
மறுபக்கம் காலேஜில் நடந்த விஷயம் பற்றி அமிர்தா கேட்க காலில் விழாத குறையாக விட்டுட்டு வந்தோம் என்று பேசிக் கொண்டிருக்கின்றன.
அந்த நேரம் பார்த்து கோபி கோபமாக வீட்டுக்கு வர எனக்கு ஒரு விஷயம் புரியல என ஆரம்பிக்க, ராமமூர்த்தி பல்பு கொடுத்து ஆப் செய்கிறார்.
மேலும் கோபி இனியா என் பொண்ணு என்பதை யாராலும் மாற்ற முடியாது என்று கோபமாக பேசுகிறார். பிறகு ராதிகாவிடம் வந்து நடந்ததை சொல்லி புலம்புகிறார். கோபியின் பேச்சுக்கு ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி கொடுத்த பதில் என்ன? ராதிகா என்ன சொல்லப் போகிறார்? இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.