baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update

கோபிக்கு உண்மை தெரிய வர,குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி இறந்து விட்டதாக டாக்டர் உறுதி செய்ய ஈஸ்வரி அதிர்ச்சியில் உறைந்து உட்கார்ந்து விடுகிறார். பாக்யா மற்றும் குடும்பத்தில் அனைவரும் கதறி அழுகின்றனர். மறுபக்கம் கோபி வீட்டில் என்ன கூட்டமாக இருக்கிறது என்று வந்து பார்க்கிறார். பிறகு செல்வி சேர் அய்யா நம்மள விட்டு போயிட்டாரு என்று சொல்ல ஒன்றும் புரியாமல் நிற்கிறார் கோபி. இனியாவிடம் என்னாச்சு என்று கேட்க தாத்தா இறந்து போயிட்டாரு என்று சொல்ல அப்படி எல்லாம் இருக்காது நான் போய் பார்க்கிறேன் என்று சொல்கிறார் கோபி.

பிறகு ரூமுக்கு சென்றவுடன் செழியன் கட்டிப்பிடித்து அழ அதெல்லாம் ஒன்னும் இல்ல மயக்கத்துல இருப்பார் நான் தண்ணி தெளிச்சு எழுப்புறேன் என்று தண்ணி தளிக்க அசைவு இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார். டாக்டர் வந்து செக் பண்ண விஷயத்தை செழியன் சொல்ல கோபி கண்கலங்கியபடி அதிர்ச்சியாகி வெளியே வருகிறார். செல்வி எல்லாரையும் தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டாரு என்று அழுகிறார். இனியாவின் கல்யாணத்தை பாக்கணும் என்று ஆசைப்பட்டாரே சொல்லி அழுகிறார். கோபி அப்பா அப்பா என்ன அதிர்ச்சியாகி நடந்து கொண்டே செல்கிறார். வீட்டுக்கு வந்த கோபி என்னாச்சு என்ன ஆச்சு என்று ராதிகா கேட்க அப்பா இறந்து போயிட்டாரு என்று சொல்ல ராதிகா ஷாக்காகிரார். உடனே மயூ ,ராதிகா, கோபி என மூவரும் வந்து ராமமூர்த்தியை பார்த்து அழுகின்றனர்.

சோகத்தில் தவிக்கும் குடும்பத்தினர்? என்ன செய்யப் போகிறார் கோபி? இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.