குடித்துவிட்டு ராதிகாவிடம் புலம்பியுள்ளார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி எழிலிடம் ஆறுதல் தெரிவித்து தைரியம் கூறி அனுப்பி வைக்கிறார்.
பிறகு அனைவரிடமும் எழில் சொல்லிவிட்டு கிளம்ப அமிர்தாவும் எல்லோரிடமும் கிளம்புகிறோம் உடம்ப பாத்துக்கோங்க ஜெனி நாங்க கிளம்புறோம் பாட்டி என்று சொல்கிறார். ராமமூர்த்தியிடம் சொல்லும் போது எழிலையும் நிலாவையும் நல்லா பாத்துக்கோங்க என்று சொல்லுகிறார்.
பாக்யா ஒரு பேக்கில் ஸ்வீட் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க அமிர்தா பாக்யாவை கட்டிப்பிடித்து கண் கலங்குகிறார். குளக்கரையில் உட்கார்ந்து பாக்யா கண்கலங்க அந்த நேரம் பார்த்து செல்வி வருகிறார். இப்படி கஷ்டப்பட்டு எழில் போகணுமா, என்று கேட்க அவன் திரும்பி வருவது இதைவிட ரொம்ப கஷ்டம். எதுவும் யாரும் சொல்ல மாட்டாங்க என்று செல்வி சொல்ல, இப்போ சொல்ல மாட்டாங்க பின்னாடி கண்டிப்பா பேசுவாங்க. அவ கண்டிப்பா சாதிப்பான் எனக்கு தெரியும் அப்பதான் வீட்ல இருக்குற எல்லாருக்கும் சந்தோஷம்,அவனுக்கும் சந்தோசம் எனக்கும் சந்தோஷம் என்று சொல்லுகிறார்.
குடித்துவிட்டு வந்த கோபி அங்கு நடந்த விஷயங்களை ராதிகாவிடம் சொல்லி புலம்புகிறார். மறுபக்கம் நடந்த விஷயங்களை பற்றி குடும்பத்தினர் பேசுகின்றனர்.கோபி என்ன புலம்புகிறார் ?அதற்கு ராதிகா சொன்ன பதில் என்ன? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.