ஈஸ்வரி சொன்ன வார்த்தையால் கோபி அசிங்கப்பட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்திக்கு பாக்கியா ஒரு கிப்ட் கொடுத்து அதை ஈஸ்வரிக்கு போட்டு விட சொல்லுகிறார். பிறந்தநாள் எனக்கு கிப்ட் ஈஸ்வரி அக்கா என்று கிண்டல் செய்கிறார் ராமமூர்த்தி.
பாக்கியா அமிர்தாவை கூப்பிட்டு ஆரத்தி எடுக்க பிறகு ஒவ்வொருவராக வந்து ஆசீர்வாதம் வாங்குகின்றனர். இதை கோபி பார்த்து கண்கலங்கி நிற்கிறார். பழனிச்சாமி வந்து காலில் விழ அதைப் பார்த்து கடுப்பாகிறார் கோபி.
ஆசிர்வாதம் வாங்க சென்ற கோபிக்கு ராமமூர்த்தி ஆசீர்வாதம் செய்ய முடியாது என்று எழுந்து விடுகிறார். சாபம் விடுறதுக்கு முன்னாடி போயிடு என்று திட்ட, நீங்க எவ்வளவு வேணா திட்டுங்க பா நான் என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க என்று சொல்ல இருவரும் திட்டி அவமானப்படுத்துகின்றனர்.
கிப்ட் ஆவது வாங்கிக்கோங்க என்று சொல்ல அதை தட்டி எறிந்து விடுகிறார் ராமமூர்த்தி. இதனால் அசிங்கப்பட்டு கோபி கீழே இறங்கி வந்து விடுகிறார்.
பிறகு அனைவரும் கிப்ட் கொடுக்க குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவராக டான்ஸ் ஆடி சந்தோஷமாக இருக்கின்றனர். அதனை கோபி வீடியோவாக எடுக்கிறார். பாக்கியாவை வில்லத்தனமாக முறைத்துப் பார்க்கிறார். அனைவரும் சாப்பிட கிளம்ப, ஈஸ்வரியிடம் பேசுகிறார் கோபி.
ஈஸ்வரி கேட்ட கேள்வி என்ன? அதற்கு கோபி என்ன பதில் சொல்லப் போகிறார்? என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.