எழில் வீட்டை விட்டு கிளம்ப பாக்யா கதறி அழுதுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் மற்றும் அமிர்தா வீட்டை விட்டு போக முடிவெடுத்து கிளம்பி வருகின்றனர். இனியா நீ வீட்டை விட்டு போறியா போகாத என்று அழுகிறார். செழியன் ராமமூர்த்தி என அனைவரும் எழிலை தடுக்க அவர் உறுதியாக இருக்கிறார்.
ஈஸ்வரியிடம் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்ட என்று சொல்லி கண்கலங்க ஈஸ்வரியும் உன்னை வீட்டை விட்டு நான் வெளியே போக சொல்லல, சொல்றத கேட்டு நடந்துக்கோ என்றுதான் சொல்கிறேன் என சொல்லி அழுகிறார். ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரியை கட்டி பிடித்து அழுகிறார் எழில். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு பாக்யா கிச்சனில் கண் கலங்கி நிற்கிறார்.
பாக்கியாவிடம் சென்று நீ போக சொல்லிட்டல நான் போறேன் மா என்று சொல்லி கண் கலங்குகிறார். மறுபடியும் பாக்யா எழிலை போக சொல்கிறார். செழியனிடம் குழந்தையை நன்றாக பார்த்துக் கொள் என்று சொல்கிறார்.அமிர்தா மற்றும் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார் எழில்.
ஈஸ்வரி என்ன சொல்லப் போகிறார்? பாக்கியா எடுக்கப் போக முடிவு என்ன? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.