எழில் வருத்தமாக இருக்க, சோகத்தில் கோபி புலம்பியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் எழில் எல்லோரும் சொன்னதை நினைத்து கண்கலங்கி அழுது கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அமிர்தா வர அவரை கட்டிப்பிடித்து நான் ராசி இல்லாதவனா என்று கேட்டு அழுகிறார். பிறகு பாக்கியா வர அழாத எழில் பாட்டி சொன்னது தப்புதான் என்று சொல்ல, இல்ல பாட்டி கரெக்டா தான் சொல்லி இருக்காங்க நான் உன்னை வேலைக்கு போகணும்னு நினைக்கல ராணி மாதிரி பார்த்துக்கணும்னு தான் நினைக்கிறேன் என்று சொல்லி அழ அவருக்கு மோட்டிவேஷனலாக பேசி பாக்கியா ஆறுதல் சொல்கிறார்.
மறுபக்கம் கோபி கதவை திற என்று சொல்ல நீ திறக்க மாட்டேன் என்று அவரே சாவியை போட்டு திறந்து உள்ளே வருகிறார். பிறகு ராதிகாவின் ரூம் கதவை தட்ட அவர் திறக்காமல் இருக்கிறார்.
கோபி போனில் கண்ணதாசன் பாட்டை வைத்துவிட்டு ரசித்து கேட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ராதிகா வந்து நிற்கிறார். பாட்டு கேட்கிறதா இருந்தா ஹெட் போன் போட்டு பாட்ட கேளுங்க என்று கோபப்பட்டு சொல்கிறார். பிறகு தனியாக உட்கார்ந்து புலம்புகிறார் கோபி.
பிறகு ஜெனியும் செழியனும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க திடீரென்று ஜெனி வாந்தி எடுக்கிறார். செழியன் ஃபுட் பாய்சன் இருக்கும் என சொல்ல இல்லை எனக்கு நான் பிரக்னண்டா இருக்கணும்னு சந்தேகமா இருக்கு என்று சொல்லுகிறார். செழியன் இடம் பிரக்னன்சி கார்ட் வாங்கி வர அனுப்புகிறார்.
மறுபக்கம் ஈஸ்வரி மற்றும் செல்வி இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கிச்சனுக்கு வந்த ஜெனி உண்மையை சொல்லுகிறா? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.