கோபி வருத்தத்தில் இருக்க இனியா முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் நடந்த விஷயங்களை ராதிகாவிடம் சொல்லி திட்டுவாங்க உன்கிட்ட சொன்னது தப்புதான் என்று மன்னிப்பு கேட்டுவிட்டு கிளம்புகிறார் கோபி.
பிறகு ரெஸ்டாரன்ட்டில் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க அவரது நண்பர் வர அவரிடம் கோபி அழுது புலம்புகிறார். அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கிறார்.
இனியவை காலேஜில் இருந்து கூட்டி வந்த பிறகு தாத்தா பாட்டி படும் கஷ்டத்தை பார்த்து இனியா வருத்தப்பட்டு குற்ற உணர்ச்சியில் நிற்கிறார்.பிறகு பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்டு வருத்தப்பட பாக்யா அட்வைஸ் கொடுக்கிறார்.
ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் தூங்காமல் குடும்பத்தை நினைத்தும், பாக்கியப்படும் கஷ்டத்தை நினைத்து வருத்தப்பட்டு இருக்க கோபியை நினைத்து கோபமாக பேசி சாபம் கொடுக்கிறார் ராமமூர்த்தி.
நடந்ததை நினைத்து அழுது கொண்டிருக்க இனியா ஒரு முடிவு எடுக்கிறார், இனியா எடுக்க போகும் அந்த முடிவு என்ன என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.