ராதிகாவின் அம்மா ஈஸ்வரியை அவமானப்படுத்த, டான்ஸ்க்கு ஓகே சொன்னா தான் இனியா மகிழ்ச்சியில் உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் வீட்டுக்கு வந்திருக்க அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து எழில் இனியாவிடம் டான்சில் செலக்ட் ஆனது குறித்து கேட்க அதற்கு பாக்யா கலந்துக்க வேணாம்னு சொல்லிட்டோம். அவ படிச்சுக்கிட்டு இருக்கா ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வைக்க முடியாது அவ படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் என்ன வேணா பண்ணட்டும் என்று சொல்லுகிறார்.அதற்கு பாட்டியிடம் எழில் கேட்க நான் ஒன்னும் சொல்லலப்பா நான் சொன்னா இங்க யாருக்கும் பிடிக்கல என்று சொல்ல எழில் அப்படியெல்லாம் இல்ல பாட்டி நீங்க சொல்லுங்க என்று கேட்க அதற்கு ஈஸ்வரி இப்ப எதுக்குப்பா டான்ஸ் ஆடிட்டு டிவில எல்லாம் வரணுமா என்று கேட்கிறார். அதற்கு பாக்யா டான்ஸ்னா பிராக்டீஸ் போகணும் யார் கூட்டிட்டு போய் கூட்டிட்டு வருவது என்று சொல்ல செழியன் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறார் ஆனால் ஜெனி இனியா இவன நம்பாத வேலை இருக்குன்னு சொல்லிடுவான் என்று சொன்னவுடன் எழில் நான் கூட்டிட்டு போறேன் என்று சொல்லுகிறார்.
பிறகு அனைவரும் கூடி பேசி கடைசியாக ஈஸ்வரி சம்மதித்து பாக்யாவும் சரி என்று சொன்னவுடன் இனியா ரொம்ப சந்தோஷப்படுகிறார். பாட்டியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தும் அம்மாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார் இனியா. காலேஜுக்கு கிளம்பி வெளியே வந்த ஈஸ்வரி மற்றும் இனியா ஆட்டோவிற்காக காத்துக் கொண்டிருக்க பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அந்த நேரம் பார்த்து ராதிகாவின் அம்மா வந்து ஒரு மனுஷன் செத்து மால கூட காயல அதுக்குள்ளார பளிச்சுன்னு புடவை கட்டிக்கிட்டு காலேஜ் போறீங்களா? அப்படியே சினிமாவுக்கும் போவீங்களா எப்படி இருந்தா அவரோட ஆத்மா எப்படி சாந்தியடையும் ஒரு வருஷம் கூட உங்களால வீட்டுக்குள்ள இருக்க முடியாதா என்று ஈஸ்வரியின் மனம் வருந்தும்படி ஓவராக பேசி விடுகிறார். புருஷன் இருக்கும்போது மதிக்கிறது இல்ல இப்ப செத்துபோதும் மரியாதை கொடுக்கிறது என்றெல்லாம் பேசி அவர்கள் முன் அவமானப்படுத்துகிறார்.
இதையெல்லாம் கேட்ட ஈஸ்வரி கதவை சாத்திக்கொண்டு அழ
இனியா அம்மாகிட்ட சொல்றேன் பாட்டி என்று சொல்ல வேண்டாம் இனியா என்னால எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள்ளே வருகின்றனர். எழிலும் பாக்கியாவும் பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி இனியாவிடம் கண்ணை காண்பித்து எதையும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.
இருவரும் உள்ளே வர ஏன் இனியா போலயா ஏதாவது மறந்துட்டியா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்லுகிறார் உடனே ஈஸ்வரி எழில் நீ கொஞ்சம் இனியா அவ காலேஜ்ல விட்டுறியா எனக்கு கொஞ்சம் மயக்கமா இருக்கு என்று சொல்லி சமாளிக்கிறார். உடனே எழில் ஹாஸ்பிடலுக்கு போலாமா பாட்டி என்று கேட்க வேண்டாம் பா நான் கொஞ்ச நேரம் படுத்து எழுந்துச்சா சரியா போயிடும். என்று சொல்லுகிறார். உடனே பாக்யா நீ போய் விட்டுட்டு வா பாட்டி நான் பாத்துக்குறேன் என்று சொல்லி ஈஸ்வரிக்கு ஜூஸ் போட்டு ரூமுக்கு எடுத்து செல்கிறார். ராமமூர்த்தியின் போட்டோவை பார்த்து ஈஸ்வரி அழுது கொண்டிருக்க பாக்யா இந்த ஜூசை குடிச்சிட்டு படுத்துக்கோங்க சரியா போயிடுமென்று சொல்லிவிட்டு வருகிறார்.
பிறகு ரெஸ்டாரண்டில் அந்த செஃப் சமைப்பதை பார்த்து செல்வி உட்பட வேலை செய்பவர்கள் அனைவரும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் பாக்யா ஆளெல்லாம் வந்துட்டாங்க போய் பாருங்க என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டு செப்பிடம் லிஸ்ட் ரெடி பண்ண சொன்னேனே பண்ணிட்டீங்களா என்று கேட்க நீங்க சொல்லி பண்ணாம இருப்பேனா ரெடி பண்ணிட்ட மேடம் என்று சொல்லுகிறார். பாக்யா வேலை பார்த்துக் கொண்டிருக்க அந்த இடத்தில் வந்து செஃப் லிஸ்ட் கொடுக்க அதில் சில திருத்தங்களை செய்ய செப் முகம் மாறுகிறது.
வீட்டுக்கு வந்த செழியன் ஜெனி இடம் பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி அவரிடம் என்ன சொல்கிறார்? அதற்கு செழியன் சொன்ன பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.