ஈஸ்வரி எடுத்த முடிவால் கோபி அதிர்ச்சியாகியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பழனிச்சாமி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு குடும்பத்தினரிடம் வந்து அனைவரும் இப்படி அழுது கொண்டே இருந்தால் பெரியவருக்கு இறுதி மரியாதை செலுத்த வேண்டாமா என்று கேட்கிறார். அதற்கு மற்றொருவர் இறுதி மரியாதை செய்யப்போவது யார் என்று பழனிச்சாமி இதில் என்ன சந்தேகம் அவருக்கு இருப்பது ஒரே மகன் அவர்தான் செய்ய வேண்டும் சொல்ல அவரை வேட்டி மாத்திக் கொண்டு வர சொல்லுகின்றனர். ஆனால் ஈஸ்வரி ராமமூர்த்தி சொன்னதையெல்லாம் யோசித்து கோபி எந்த சடங்கும் செய்யக்கூடாது என்று வலுக்கட்டாயமாக சொல்லி விடுகிறார்.
என்னம்மா பேசுறீங்க எங்கப்பாக்கு நான் ஏன் சடங்கு செய்யக்கூடாது என்று கோபி கேட்க நான் அவர் கூட 52 வருஷம் வாழ்ந்திருக்கேன் அவருக்கு என்ன செய்யணும் செய்யக்கூடாதுன்னு சொல்ற உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கு. நீ செய்ய கூடாது என்று தீர்த்து சொல்லி விடுகிறார்.
ஆனால் பழனிச்சாமி ஐயா கோபத்தில் கூட பேசியிருக்கலாம் அதை இப்போ யோசித்துப் பார்க்க முடியுமா என்று கேட்க இல்ல தம்பி நான் வேணா கோவத்துல பேசுவேன் ஆனா அவரு மனசுல இருந்து தான் பேசினாரு மன வருத்தத்தோட பேசினாரு என்று கண்கலங்கி அழுகிறார் இது மட்டும் இல்லாமல் என்கிட்ட இதுவரைக்கும் அவர் எதுவுமே கேட்கல, கடைசியா கேட்ட இத நான் அவருக்காக செய்யணும் என்று உறுதியாக சொல்லிவிடுகிறார்.
ராதிகா, பழனிச்சாமி மற்றும் எழில் பாட்டியை சமாதானப்படுத்த இந்த விஷயத்தில் எனக்கு யாரும் எதுவும் சொல்ல வேணாம், நான் எடுக்கிறது தான் முடிவு, இவரு இப்படி ஆனதுக்கு காரணமே இவன் தான். எங்க குடும்பத்தை அசிங்கப்படுத்துவது, தல குனிய வச்சது ,எங்க மருமகள நடு தெருவுல நிக்க வச்சது எல்லாமே இவன்தான் என் பேர பசங்கள கண் கலங்க வச்சது எல்லாமே இவன் தான் ஆனா இப்போ அப்பான்னு உரிமை எடுத்துக்கிட்டு வந்தா எல்லாமே கொடுத்திட முடியுமா என்று பழனிச்சாமி இடம் சொல்கிறார் ஈஸ்வரி.
நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் நான்தான் எல்லாம் சடங்கையும் பண்ணுவேன் என்று கோபி சொல்கிறார். இவன் எங்க பையனே கிடையாது அதை பலமுறை சொல்லிட்டோம் என்று ஈஸ்வரி சொல்லுகிறார்.
கோபி எடுக்கப் போக முடிவு என்ன? ஈஸ்வரி சொல்லப்போகும் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.