சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது பாக்கியலட்சுமி ரித்திகாவின் வளைகாப்பு.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரித்திகா. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் குக்காக பங்கேற்ற ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
பிறகு திருமணம் முடிந்த நிலையில் சில மாதங்களில் சீரியலில் இருந்து விலகினார். பிறகு கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் இருந்த ரித்திகா சமீபத்தில் நிறைமாத கர்ப்பிணியாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
தற்போது அவருக்கு சிம்பிளாக வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. அதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமில்லாமல் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.