மொத்த குடும்பமும் துயரத்தில் தவித்து வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பழனிச்சாமி அழுதுகிட்டு இருந்தா எப்படி அவருக்கு செய்ய வேண்டிய விஷயங்களை செய்யலாம் முதலில் அவரை வெளியே எடுத்துக் கொண்டு வரலாம் முடிவு பண்ணி எல்லா ஏற்பாடும் செய்கின்றனர். ஒவ்வொருவராக வந்து மாலை போட்டு விடுகின்றனர். குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுது கொண்டிருக்க ராதிகா கோபியை கூப்பிட்டு எல்லாரும் எமோஷனலா இருக்காங்க நீங்களாவது அடுத்து என்ன நடக்கணுமோ அதை பாருங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
அமிர்தாவின் அம்மா காலையிலிருந்து பாட்டி எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்டாங்க ஏதாவது கொண்டுவா என அமிர்தாவிடம் சொல்ல அமிர்தா கிச்சனுக்கு வருகிறார். ராதிகா கிச்சனில் ஏற்கனவே காபி ஊத்தி கொண்டிருக்க நான் கொடுத்த குடிக்க மாட்டாங்க நீ ஜெனி கிட்டையும் அத்தை கிட்டயும் குடு என்று சொல்ல அமிர்தா வாங்கிக் கொண்டு போய் கொடுக்க ஈஸ்வரி குடிக்க மறுக்கிறார்.
ஜெனி அப்பா மரியத்திடம் ஒரு நல்ல மனுஷன் இருந்திருக்காருன்றது கஷ்டம் தான் இருந்தாலும் ஜெனி இப்போ தனியா கிடையாது அவ வயித்துல ஒரு குழந்தை இருக்கு அவளையும் பாக்கணும் இல்ல அழுத நிறுத்த சொல்லு மேல குழந்தை வந்து பாக்கணும்னு கூட்டிட்டு வா என்று சொல்லி ஜெனியை கூட்டி செல்கின்றனர்.
அந்த நேரம் பார்த்து ராதிகாவின் அம்மா மாலையுடன் வந்து அழுகிறார். நல்ல மனுஷன் இப்படி ஆயிட்டாரே என்று ராதிகா வரை அழைத்துச் சென்று விடுகிறார். பிறகு பாக்யாவிற்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார் ராதிகா.
பழனிச்சாமி அடுத்து நடக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்யலாம் என்று செய்து கொண்டிருக்கிறார். கோபியின் நண்பர் மாலை போட்டு கண் கலங்குகிறார்.
யார் யார் என்ன வருத்தப்பட்டு பேசுகிறார்கள்? இறுதியில் நடக்கப்போவது என்ன என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.