பாக்கியா தான் என் பொண்டாட்டி என உண்மையை உடைத்துள்ளார் கோபி.

Baakiyalakahmi Upcoming Episode Promo Updates : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி தன்னுடைய மனைவி பாக்கியத்திற்கு தெரியாமலும் அதேபோல் ராதிகாவிற்கு தன்னுடைய மனைவி பாக்கியம் தான் என தெரியாமலும் இருவரையும் நாடகம் போட்டு ஏமாற்றி வருகிறார்.

இந்த நிலையில் மூர்த்தி ராதிகாவிடம் கோபி பற்றி விசாரித்து அதன் பிறகு கல்யாணம் பற்றி முடிவு செய்யுங்கள் எனக் கூறியதை அடுத்து ராதிகா கோபியிடம் உங்களது குடும்பத்தை நான் பார்த்தே ஆக வேண்டும் என உறுதியாக சொல்ல கூட்டிட்டு போய் காட்ட முடியாது என கோபி சொன்னதால் அவரை வெளியே போங்க என வீட்டை விட்டுத் துரத்தினார்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் கோபி ஃபுல்லாக குடித்துவிட்டு ராதிகா வீட்டிற்கு செல்ல இங்கே எதுக்கு ட்ராமா போட வந்தீங்க என ராதிகா கேட்கிறார். என் குடும்பத்தை பார்க்கனும்னு சொன்னல இந்தா பாரு என பாக்கியா உடனிருக்கும் போட்டோவை எடுத்து காண்பிக்கிறார்.

இதைப்பார்த்த ராதிகா டீச்சர் என அதிர்ச்சி அடைய ஆமாம் பாக்கியா தான் என்னுடைய பொண்டாட்டி என கோபி உண்மையை உடைக்கிறார். உண்மை ராதிகாவுக்கு தெரியவர அதன் பிறகு அவர் என்ன முடிவு செய்யப் போகிறார் என்பதுதான் வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாக உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.