ராதிகா கொடுத்த டார்ச்சர் காரணமாக இனியாவை அடிக்கப் பாய்ந்துள்ளார் கோபி.

Baakiyalakahmi Episode Update 27.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடு ஸ்கூலுக்கு கிளம்ப தயாராக இருக்கும் இனிய தாத்தா தன்னுடைய பெயரை சொல்லி அதைப் பற்றி மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் கோபி வருகிறார். கோபி படிக்கட்டில் இருந்து இறங்கி வரும்போது ராதிகா இன்னைக்கு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறதா சொல்லி இருக்கீங்க ஐ அம் வெயிட்டிங் வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார்.

ராதிகா கொடுத்த டார்ச்சர்.. இனியாவை அடிக்கப் பாய்ந்த கோபி, கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி - விருவிருப்பான பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இதே டென்ஷனில் கோபி கீழே இறங்க அப்போது இனியா தாத்தா என் பேரை சொல்லி கூப்பிட்டாரு உங்க பேரையும் சண்டை சொல்கிறேன் வாங்க என அழைக்கிறார். கோபி இப்போது வேண்டாம் டைம் ஆயிடுச்சு கிளம்பலாம் என சொல்ல இனியா வற்புறுத்த ஒரு முறை சொன்னா உனக்கு புரியாதா என அடிக்க பாய்கிறார். இதனால் இனியா பயந்துபோய் கதறி அழுத ஈஸ்வரி கோபியை திட்டி விடுகிறார். பிறகு கோபி இனியா மற்றும் தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு வேறு ஏதோ மேல இருந்த கோபத்தை உன்னிடம் காட்டிவிட்டேன் இனிமே உன்னிடம் இப்படி நடந்து கொள்ள மாட்டேன் என மன்னிப்பு கேட்கிறார்.

பிறகு பாக்கியா சமைக்கும் இடத்திற்குச் சென்று விட்டு தனத்திற்கு போன் போடுகிறார். தனம் எப்படி இருக்கீங்க நாங்க வந்த பிறகு அண்ணா ஏதாவது உங்க கிட்ட சண்டை போட்டாரா எப்படி இருக்கிறார் என்ன ஏது என கேட்க அவர் இன்னும் மோசமாகி விட்டாரு, சிடுசிடுவென இருக்காரு என கூறுகிறார். அப்படி மூர்த்தி தம்பிக்கும் அவருக்கும் என்னதான் பிரச்சனை ஏன் சத்தம் போட்டாரு என பாக்கியா கேட்க தனம் அதெல்லாம் ஒன்றும் இல்லை அதை மறந்து விடுங்கள் என கூறுகிறார். இப்பவும் சொல்றேன், உங்களுக்கு ஏதாவது ஒன்னுனா நாங்க இருக்கோம்.

ராதிகா கொடுத்த டார்ச்சர்.. இனியாவை அடிக்கப் பாய்ந்த கோபி, கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி - விருவிருப்பான பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

ஆனா இப்படி எல்லோரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க, இப்படி வெகுளியாய் இருக்காதீங்க என சொல்ல ஏன் இப்படி சொல்கிறாய் என பாக்கியா கேட்க தனம் சொல்லணும்னு தோணுச்சு அதனால சொன்னேன் என கூறுகிறார்.

பிறகு கோபி ராதிகா வீட்டிற்கு செல்ல ராதிகா கிளம்பலாமா என கேட்கிறார். கோபி ஒரு ரெண்டு நிமிஷம் அதுக்கு முன்னாடி உங்க கிட்ட பேசணும் கண்டிப்பா நான் உன்னை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன் என கூறுகிறார். எதுக்கு திடீர்னு என்னுடைய குடும்பத்தை பார்க்கனும்னு உனக்கு ஆசை வந்தது என்ன ஆச்சு என கேட்க மூர்த்தியும் தனமும் வந்து உங்கள பத்தி கேட்பவரே நல்லவர் கிடையாது அவரைப் பற்றி விசாரிச்சு முடிவு பண்ணுங்கனு சொன்னாங்க என கூறுகிறார்.

உனக்காக என் குடும்பத்தை விட்டு விட்டு வரேன்னு சொல்லி இருக்கேன். ஆனால் நீ யாரோ எதுவோ சொன்னாங்கன்னு என் மேல சந்தேகப்படுறியா? தினமும் யாராவது ஏதாவது சொல்லுவாங்க அதற்கெல்லாம் என்னால ப்ரூப் பண்ணிட்டு இருக்க முடியாது என கூறுகிறார். எனக்கு உங்க குடும்பத்தை பார்த்தே ஆகணும் கூட்டிட்டு போங்க என ராதிகா உறுதியாக இருக்க, கோபி முடியாது ராதிகா நீ நார்மலா இதை கேட்டு இருந்தா கூட நான் கூட்டிட்டு போய் இருப்பேன் ஆனால் யாரோ சொன்னாங்கன்னு கேட்கும்போது என்னால கூட்டிட்டு போக முடியாது என கூறுகிறார்.

கோபி இப்படி உறுதியாக சத்தமாக சொன்னதால் இன்னும் கடுப்பான ராதிகா அப்படினா வெளியே போங்க கோபி என சத்தம் போடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.