ராதிகா கொடுத்த அதிர்ச்சி ஒரு பக்கம் இருக்க வீட்டுக்கு லேட்டாக வந்த கோபியை வச்சு செய்துள்ளார் ஈஸ்வரி.

Baakiyalakahmi Episode Update 26.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் தன்னுடைய தாத்தாவுக்கு பேச பயிற்சி கொடுக்கிறார். பிறகு அவர் ஈஸ்வரி என பெயரை சொல்ல இனியா இதைக் கேட்டு பாட்டியை கூட்டி வந்து உட்கார வைக்கிறார். தன்னுடைய கணவர் பெயர் சொல்வதைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறார் ஈஸ்வரி.

ராதிகா கொடுத்த ஷாக்.. வீட்டுக்கு லேட்டாக வந்த கோபிக்கு காத்திருந்த இன்னொரு அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு பாக்கியா கோபியின் வருகைக்காக நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்கிறார். 12 மணி ஆகியும் கோபி வராமல் இருக்க அப்போது எழுந்து வந்த ஈஸ்வரி பாக்கியா தூங்காமல் இருக்க ஏன் இன்னும் தூங்காம இருக்க என்று கேட்கிறார். இன்னும் கோபி வரவில்லை என தெரிந்ததும் ஈஸ்வரியின் தூங்காமல் அப்படியே உட்கார்ந்து கொள்கிறார்.

லேட்டாக வீட்டுக்கு வந்த கோபி கதவைத் திறக்க கார் ஹாரன் அடிக்க பாக்கியா கதவை திறக்க செல்ல ஈஸ்வரி போகாதே என தடுத்து நிறுத்துகிறார். பிறகு வீட்டுக்குள் வந்த கோபி பாக்கியாவை திட்டுகிறார். உடனே ஈஸ்வரி நீ நெனச்ச நேரத்துக்கு வீட்டுக்கு வந்தா உனக்காக முழிச்சிட்டு இருக்கணுமா.? அக்கம் பக்கம் யாரும் இருக்க மாட்டாங்களா எதுக்கு ஹாரன் அடிக்கிற என திட்டுகிறார்.

அதன் பின்னர் கோபி எதை எதையோ சொல்லி சமாளிக்க நீ சரி இல்ல உன்ன பார்த்துதான் பசங்க எல்லாத்தையும் கத்துப்பாங்க என சொல்கிறோம் ஆனால் உன்னுடைய போக்கு சரியில்லை என திட்ட கோபி சாரி சொல்லிவிட்டு மேலே சென்று விடுகிறார். பிறகு ஈஸ்வரி பாக்கியாவிடம் அவனிடம் நீ ஒன்று கவனித்தாயா எழில் அவங்க அப்பா கிட்ட பேசுறது இல்ல. அவரு அவனைப் பார்த்த முறைக்கிறார் இவனும் அவருக்கு உடம்பு சரியில்லாம போனதிலிருந்து பார்க்க வராதே கிடையாது. எல்லாத்துக்கும் ஏதோ காரணம் இருக்கு என கூறுகிறார்.

பிறகு கோபி ரூமுக்குள் செம டென்ஷன் ஆக இருக்க அப்போது ராதிகா வாய்ஸ் மெசேஜ் நாளைக்கு உங்க வீட்டுக்கு வரேன் நான் உங்க வீட்ல இருக்கு உங்கள பார்க்கணும் மறந்துடாதீங்க என கூறுகிறார். உடனே கோபி போன் போட்டு ராதிகாவை சமாதானம் செய்ய முயற்சி செய்ய ஆனால் ராதிகா தான் சொன்னதில் உறுதியாக இருக்கிறார். இதனால் கடுப்பில் கோபி போனை தூக்கி போட அந்த நேரத்தில் பாக்கியா உள்ளே வந்து விடுகிறார். ராதிகா கொடுத்த டென்ஷனால் கோபி பாக்கியா மீது கோபப்படுகிறார்.

ராதிகா கொடுத்த ஷாக்.. வீட்டுக்கு லேட்டாக வந்த கோபிக்கு காத்திருந்த இன்னொரு அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பாக்கியா என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க என சொல்ல என்னுடைய பிரச்சனையே நீதான் சொல்லு இப்ப என்ன பண்ண போற என கோபி திட்டுகிறார். அதன் பின்னர் மறுநாள் காலையில் கோபியின் அப்பா ஈஸ்வரி என பெயர் சொல்ல இனியா என்னுடைய பெயரைச் சொல்லுமாறு கூறுகிறார். அவரும் சொல்ல அதன்பிறகு இனியா தன்னுடைய அம்மாவை அழைத்து தாத்தா பேசுவதை சொல்கிறார்.

ஆனால் பாக்கியா கோபி பற்றிய சிந்தனையில் இருக்க இதை கவனித்த எழில் என்னாச்சு என கேட்க அதெல்லாம் ஒன்றும் இல்லை என சொல்ல அவர் போனா போகட்டும் நீ எதற்கு அதைப் பத்தி கவலைப் படுற உனக்காக நாங்க இருக்கோம் என கூறுகிறார். சும்மா எப்ப பார்த்தாலும் எதுக்கு அப்படி சொல்ற என எழிலை திட்டி அனுப்பி விடுகிறார் பாக்கியா. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.