சன் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு தாவியுள்ளார் பிரபல தொகுப்பாளர்.

சன் டிவியில் ஒளிபரப்பான வணக்கம் தமிழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்திருப்பவர் அசார். இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பலர் பார்த்து வந்த நிலையில் திடீரென கடந்த சில வாரங்களாக இந்த நிகழ்ச்சியில் இவர் பங்கேற்காமல் இருந்து வந்தார்.

சன் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு தாவிய பிரபல தொகுப்பாளர்.. இனிமே தான் நிகழ்ச்சி களைகட்ட போது - யார் அவர் தெரியுமா??

மேலும் இவரது ட்விட்டர் பக்கத்தில் சன் டிவியில் இருந்து மொத்தமாக வெளியேறுவதாக தெரிவித்திருந்தார். இதனால் இவருடைய அடுத்த கட்ட நகர்வு என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்த நிலையில் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஆமாம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை இனி அசார் தான் தொகுத்து வழங்க உள்ளார் என தெரியவந்துள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சியை மாகப ஆனந்த் மற்றும் அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது இவர்களில் யார் வெளியேறப்போவது என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சன் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு தாவிய பிரபல தொகுப்பாளர்.. இனிமே தான் நிகழ்ச்சி களைகட்ட போது - யார் அவர் தெரியுமா??

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர் மேலும் இனிமேல் இந்த நிகழ்ச்சி கலைகட்ட போவது என சொல்லி வருகின்றனர். அதே சமயம் சன் டிவியில் இருந்து வெளியேற காரணம் என்ன என பலரும் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.