பூவே உனக்காக சீரியலில் இருந்து அருண் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக நடிக்கப் போவது யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Azeem in Poove Unakaga Serial : சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பூவே உனக்காக. இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வந்தவர் அருண். நெகட்டிவ் ரோல் கலந்த கதாபாத்திரம் என்பதால் ஆதரவு எதிர்ப்பு என இரண்டும் இருந்து வந்தது.

பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகிய அருண்.. அவருக்கு பதிலாக நடிக்கப்போவது இவர்தான் - இதுவும் நல்லாத்தான் இருக்கும்.!!

தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகிக்கொள்வதாக அருண் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு பதிலாக இந்த சீரியலில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி விஜய் டிவி பகல் நிலவு கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த அசீம் அருண் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இவருடைய காட்சிகள் இரு தினங்களுக்கு முன்னர் எடுக்க தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகிய அருண்.. அவருக்கு பதிலாக நடிக்கப்போவது இவர்தான் - இதுவும் நல்லாத்தான் இருக்கும்.!!