Azeem Divorced Her Wife

தனது மனைவியிடம் இருந்து சட்டரீதியாக விவாகரத்து பெற்று உள்ளேன் என்று கூறியுள்ளார் அசீம்.

Azeem Divorced Her Wife : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் பகல் நிலவு. இந்த சீரியல் தொடக்கத்தில் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வந்தது.

இந்த சீரியலில் ஹீரோவாக நடித்தவர் அசீம். இவருக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்திருப்பார்.

மனைவியிடமிருந்து சட்டரீதியாக விவாகரத்து - பகல் நிலவு சீரியல் அசீம் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு.!!

இவர்கள் இருவரும் நிஜத்தில் காதலிக்கிறார்கள் என்று சர்ச்சையை ஏற்படுத்தினார்கள். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது.

இந்த நிலையில் wild card என்ட்ரி ஆக அசீம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போது ஷிவானியின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை காண ஆவலோடு அனைவரும் காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அசீம் பிக் பாஸ் வீட்டிற்குள் wild card என்ட்ரி ஆகவில்லை. இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தையே தந்தது.

இப்படியான நிலையில் அவர் என் மனைவியை நான் சட்ட ரீதியாக விவாகரத்து செய்திருக்கிறேன். என்றும் இதுகுறித்து என்னிடம் எந்த கேள்வியையும் கேட்க வேண்டாம் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.