புதுடெல்லி: ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டி பிரதமர் மோடி துவைக்கி வைத்த “ஆயுஷ்மான் பாரத்” எனும் மருத்துவ காப்பீட்டு  திட்டம் துவக்கி வைத்த 24 மணி நேரத்திற்குள் 1000 பேர் பயன் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தின் படி நாடு முழுவதும் 10.71 கோடி குடும்பங்களை சேர்ந்த 50 கோடி பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை வசதி கிடைக்கும்.

ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது.