
Ayokya First Look : விஷால் நடித்து வரும் அயோக்யா படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த தகவல் படக்குழுவினர் தரப்பில் இருந்து தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளுடன் தயாரிப்பாளர் சங்கத்தை தலைவர், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் என பல முக்கிய பதவிகளிலும் இருந்து வருகிறார்.
மேலும் இவர் இரும்புத்திரை, சண்டைக்கோழி 2 ஆகிய படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸின் இணை இயக்குனரான வெங்கட் மோகன் இயக்கத்தில் அயோக்யா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ராசிக்கன்னா இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது.
தற்போது அது என்ன தகவல் என்ன என்பது தெரிய வந்துள்ளது. அதாவது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Here is it….the First Look of #Ayogya will be released this coming Monday….GB#AyogyaFirstLook@VishalKOfficial @RaashiKhanna @TagoreMadhu @rparthiepan @ivenkatmohan @iamrascalpapa @SamCSmusic @AntonyLRuben
— Vishal (@VishalKOfficial) November 16, 2018