Ayogya Teaser : விஷாலின் அயோக்யாதிரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடனும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்க செயலாளர் என முக்கிய பதவிகளையும் வகித்து வருபவர் விஷால்.
இவர் சண்டக்கோழி 2 படத்திற்கு பிறகு வெங்கட் மோகன் இயக்கத்தில் அயோக்யா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.
தெலுங்குவில் ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்த மெகா ஹிட் திரைப்படமான டெம்பர் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.
ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர்.
அதன் படி தற்போது அயோக்கியா படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.