Ayogya Movie :
Ayogya Movie :

Ayogya Movie : வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘அயோக்யா’. இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திவன், கே.எஸ்.ரவிக்குமார், சோனியா அகர்வால், ஆர்.ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.

‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷ்ணு ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

விவாகரத்துக்கு மனைவியே காரணம்? – முதல் முறையாக அதிர்ச்சி தகவலை கூறிய விஷ்ணு விஷால்.!

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மே 10-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படம் தொடர்பான அத்தனை பணிகளும் முடிந்துவிட்டதாக விஷால் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் ”இனி எவனாவது பொண்ணுங்கள நாசம் பண்ணனும்னு நினைச்சா.. தூக்கு தண்டனைதான்னு பயப்படனும்” என படத்தில் வரும் வசனத்தையும் டிவீட் செய்துள்ளார்.

தெலுங்கில் டெம்பர் எனும் பெயரிலும் இந்தியில் சிம்பா எனும் பெயரிலும் வெற்றி பெற்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக அயோக்யா வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.