Ayogya Movie Review | Sam Css is music Mass | Vishal | Raashi khanna | Anirudh | Parthiban | Kollywood | Tamil Cinema | Ayogya Review

Ayogya Movie Review : 

முருகதாஸின் உதவி இயக்குனரான வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், பார்த்திபன், ராஷி கண்ணா, கே.எஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடிப்பில் பல தடைகளை தகர்த்தெறிந்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் அயோக்யா.

படத்தின் கதை :

சென்னையில் பல சட்ட விரோதமான செயல்களை செய்து வருபவர் பார்த்திபன். அரசியல் வாதிகளை கையில் வைத்து கொண்டு தனக்கேற்றார் போல ஒரு போலீஸ் அதிகாரியை நியமிக்குமாறு மினிஸ்டரிடம் கேட்கிறார்.

பாலாவின் மனம்கவர்ந்த பிக் பாஸ் நாயகி – அடுத்த படத்திலும் அவர்தான் ஹீரோயினாம்!

அதன் பின்னர் பணத்திற்காக எதையும் செய்யலாம் என்ற குணம் கொண்ட போலீஸான விஷால் சென்னைக்கு மாற்றப்படுகிறார்.

விஷாலும் பார்த்திபனிடம் பணம் வாங்கி கொண்டு அடியாள் போலீஸாகவே இருந்து வருகிறார். அதன் பின் பார்த்திபனின் 4 தம்பிகள் ஒன்று சேர்ந்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விடுகின்றனர்.

இது விஷாலுக்கு தெரிய வர அதன் பின்னர் என்ன நடந்தது? விஷால் திருந்தினாரா இல்லையா? குற்றவாளிகள் வேறறுக்கப்பட்டார்களா இல்லையா? என்பது தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

வழக்கம் போல் விஷால் இந்த படத்திலும் ஒரு மாஸான போலீஸ் அதிகாரியாக மிரட்டி ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.

ராஷி கண்ணா தன்னுடைய பங்கை கச்சிதமாக நடித்து கொடுத்துள்ளார். ஆனால் கதாபாத்திரம் தான் பெரிய அளவில் இல்லை.

பார்த்திபனின் காமெடி கலந்த வில்லத்தனம் பர்பெக்ட்டாக ஒர்க் அவுட்டாகியுள்ளது.

நேர்மையான ஏட்டாக நடித்துள்ள கே.எஸ் ரவிக்குமாரின் நடிப்பு அருமை.

தொழில்நுட்பம் :

இசை :

சாம் சி.எஸ்ஸின் இசை மாஸாக அமைந்துள்ளது. பாடல்களும் ரசிக்கும் வகையில் இருப்பது சிறப்பு.

ஒளிப்பதிவு & எடிட்டிங் :

படத்தின் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் குறை சொல்லும் அளவுக்கு இல்லை.

இயக்கம் :

டெம்பர் படத்தை அப்படியே கொடுத்திருந்தாலும் கிளைமேக்ஸ் காட்சிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் பாராட்டக்கூடிய வகையில் உள்ளது.

சமூகத்திற்கு தேவையான கருத்துகளை சேர்ந்து சொல்லியதற்கு இயக்குனரை நிச்சயம் பாராட்டலாம்.

தம்ப்ஸ் அப் :

1. விஷால், பார்த்திபன், கே.எஸ் ரவிக்குமார் நடிப்பு
2. படத்தின் இசை
3. கிளைமேக்ஸ்
4. சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் அவலங்களை அப்பட்டமாக தோலுரித்து காட்டியது.

தம்ப்ஸ் டவுன் :

1. பொதுவாக தமிழ் படங்களில் இருக்கும் சில லாஜிக்கல் தவறுகள்.

REVIEW OVERVIEW
அயோக்யா விமர்சனம்
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.
ayogya-movie-reviewமொத்தத்தில் அயோக்யா சமூகத்திற்கு தேவையான படம்.