
அயோத்தி வழக்கு : அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிப்பு சம்பந்தபட்ட நிலத்தின் வழக்கை ஜனவரி மாதம் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அலஹாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல்முறையீடு மனுக்களை 2019 ஜனவரி மாதத்தில் விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம் தான், இந்த பிரச்சினைகளுக்கு காரணம். இந்த நிலம் தங்களுடையது என்று இந்து மதமும், இஸ்லாம் மதமும் சண்டை இட்டு வருகிறது.
இதை தொடர்ந்தே 1992- இல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவர்களால் இடிக்கப்பட்டது. இது பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது.
இதன் வழக்கு அலஹாபாத் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2.77 ஏக்கரை மனுதாரர்கள் பிரித்து கொள்ளுமாறு தீர்ப்பளித்தது.
ஆனால், இந்த தீர்ப்புக்கு எதிராக பல்வேறு தரப்பினர் மூலம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் விசாரணை எப்போது தொடங்கும் என்பதின் விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி வழக்கு விசாரணை ஜனவரி மாதம் தொடங்கும் எனவும், மார்ச் மாதம் வரை விசாரணை நடக்கும் எனவும் கூறப்பட்டது.