Ayalaan Movie Update :

அயலான் படத்திற்கு வந்த புதிய சிக்கல் சிவகார்த்திகேயன் அப்செட்டில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ayalaan Movie Update : தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கி இன்று திரையுலகில் முன்னணி நடிகராக இடம் பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் தற்போது டாக்டர் மற்றும் அயலான் என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றனர்.

அயலான் திரைப்படத்தை நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

இன்னும் ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டியுள்ள நிலையில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா தன்னுடன் செய்து ரகுல் பிரீத் சிங் போதைப்பொருள் எடுத்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

அஜித்துக்கு தம்பியான இளம் நடிகர்.. சூடு பறக்கும் வலிமை அப்டேட் – அது யார் தெரியுமா??

இதனால் ரகுல் பிரீத் சிங் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை வட்டத்திற்குள் சிக்கியுள்ளார். இதன் காரணமாக அவர் அயலான் படப்பிடிப்பில் கலந்து கொள்வது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் சிவகார்த்திகேயன் கடும் அப்செட் இருந்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.