அயலான் திரைப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘எஸ்கே21’ திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சாய்பல்லவியுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி இருந்த “அயலான்” திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு நேற்றைய தினம் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நட்பை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது. இப்படத்தில் அதிகமான கிராபிக்ஸ் பணிகள் இடம்பெற்றுள்ளதனால் படத்தின் வேலைகள் முடிய தாமதமானதாக படக்குழு தெரிவித்திருந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தின் தகவலாக நேற்றைய தினம் இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்த நிலையில் படக்குழு இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. அது தற்போது இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வருகிறது.