Avoid this type of food in morning :
Avoid this type of food in morning :

காலையில் எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகள் என்னென்னவென்று, தெரியுமா உங்களுக்கு?

Avoid this type of food in morning :

தொடங்கும் நாள் சிறந்ததாக இருக்க வேண்டுமெனில், அதற்கு காலையில் நல்ல ஆரோக்கியமான மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றல் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், உடலின் சக்தி சீராக இருந்து, உடல் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும்.

சில உணவுகளை காலையில் எடுப்பது நமது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. அவற்றில் சில உணவுகள்.

* காபி
காபியை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நமது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.

காபியில் உள்ள காஃப்பைன் என்ற பொருள் தீவிரமான பிரச்சினையை உள்ளாகி விடும். எனவே ஒரு தம்ளர் தண்ணீர் குடித்தபின் காபி குடிக்கும் பழக்கத்தை மேற்கொள்வது சிறந்ததாகும்.

* வெள்ளரி
வெறும் வயிற்றில் வெள்ளரி எடுப்பது மிகப் பெரிய தீங்கு விளைவிக்கக் கூடிய ஒன்றாகும் இதனால் வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல் வர அதிகம் வாய்ப்புள்ளது.

* தயிர்
தயிரில் நல்ல பாக்டீரியா இருந்தாலும், காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது அல்ல.

இதில் உள்ள நல்ல பாக்டீரியா வயிற்றுப் பலத்துடன் சேர்ந்து வினைபுரிந்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

* வாழைப்பழம்
வாழைப்பழத்தில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால் இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மெக்னீசியம் ரத்தத்தில் அதிகரித்து கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.

* டீ
காபியை போலவே டீயிலும் கஃபைன் உள்ளதால் வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால் இதனை குடித்தபின் இதயத்தை பாதிக்கும்.

* தக்காளி
தக்காளியில் உள்ள ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன்
இணைந்து வயிற்றில் கற்களை உருவாக்கக்கூடியது . ஆகவே தக்காளி வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.

* இனிப்பு வகைகள் காலையில் வெறும் வயிற்றில் இனிப்பு வகைகளை உட்கொண்டால் இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்தும் .

இன்சுலினை கட்டுப்படுத்த கணையத்திற்கு அதிக ஆற்றல் தேவை படவேண்டியிருக்கும். இதனால் டயாபட்டீஸ் எளிதில் வருவதற்கு காரணமாக அமைகிறது.

காலையில் எழுந்தவுடன் மேற்கண்ட உணவுகளை தவிர்த்து தண்ணீர் அல்லது நீராகாரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பருகி ஆரோக்கிய வாழ்வுக்கு விடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here