Avengers Endgame
Avengers Endgame

Avengers Endgame – இன்று உலகின் எந்த மூளைக்கு சென்றாலும் நம் செவியில் தவறாமல் வந்து விழும் ஒரு பெயர் அவெஞ்சர்ஸ். நேரடி தமிழ் படங்களை எல்லாம் ஓரங்கட்டும் அளவு தமிழிலும் வரலாறு காணாத எதிர்பார்ப்புடன் திரைக்கு வருகிறது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.

ஏற்கனவே வெளியான முதல் மூன்று பாகங்கள் வசூலில் இமாலய சாதனைகள் படைக்க நான்காம் மற்றும் கடைசி பாகம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவு இப்படத்தை இந்தியாவில் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்து வருகிறது மார்வெல்.

ஏ.ஆர்.முருகதாஸ் வசனம், ஏ.ஆர்.ரகுமான் இசை என தமிழர்களுக்கு பரிச்சயமான பிரபலங்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார்.

அதேபோல் பிளாக் விடோ கதாபாத்திரத்துக்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் விளம்பரத்திற்காக மட்டுமே 1400 கோடி வரை செலவு செய்திருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மேலும் இப்படம் முதல் வார இறுதியில் உலகம் முழுக்க சேர்த்து 300 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வசூல் செய்யும் என ஆருடம் கூறப்படுகிறது.

இது கடைசியாக வெளியான அவெஞ்சர்ஸ் பாகத்தை விட அதிகம் என்பது கூடுதல் தகவல்.