Avengers Endgame
Avengers Endgame

Avengers Endgame :  இன்று உலகின் எந்த மூளைக்கு சென்றாலும் நம் செவியில் தவறாமல் வந்து விழும் ஒரு பெயர் அவெஞ்சர்ஸ்.

நேரடி தமிழ் படங்களை எல்லாம் ஓரங்கட்டும் அளவு தமிழிலும் வரலாறு காணாத எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்துள்ளது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.

ஏற்கனவே வெளியான முதல் மூன்று பாகங்கள் வசூலில் இமாலய சாதனைகள் படைக்க நான்காம் மற்றும் கடைசி பாகம் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது.

முதல்நாளில் இந்தியாவில் இப்படத்தின் வசூல் ரூ. 63 கோடி என நாம் ஏற்கனவே கூறியிருந்த நிலையில்,

சிவகார்த்திகேயன் போனதால் விஜய் சேதுபதிக்கு இப்படியொரு கொண்டாட்டமா?

தற்போது இந்தியா முழுக்க முதல் மூன்று நாட்களில் இப்படம் ரூ. 180 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி பிரமிக்க வைத்துள்ளது.

இதற்குமுன்னர் பாகுபலி இரண்டாம் பாகம்தான் மூன்று நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. ஆனால் அந்த சாதனையை இரண்டே நாட்களில் முறியடித்துள்ளது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.

முன்னெப்போதும் இல்லாத அளவு இப்படத்தை இந்தியாவில் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்தது மார்வெல்.

ஏ.ஆர்.முருகதாஸ் வசனம், ஏ.ஆர்.ரகுமான் இசை என தமிழர்களுக்கு பரிச்சயமான பிரபலங்கள் இதில் பணியாற்றி உள்ளனர்.

இதில் விஜய் சேதுபதி அயர்ன் மேன் கதாபாத்திரத்துக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். அதே போல் பிளாக் விடோ கதாபாத்திரத்துக்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.