Avenger End Game
Avenger End Game

Avenger End Game :

உலக புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் வரிசையின் கடைசி பாகம் என்பதால் இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பை சுமந்துகொண்டு,

திரைக்கு வந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் உலகளவில் முதல் வார இறுதியில் 8 ஆயிரத்து 384 கோடி வசூல் செய்து புதிய வசூல் சரித்திரம் படைத்தது.

மார்வெல்லின் மொத்தம் 25 சூப்பர் ஹீரோக்களுடன் களமிறங்கிய Avengers: எண்ட் கேம் திரைப்படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் 2600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.

முதல்நாளில் இந்தியா முழுவதும் 63 கோடி வரை வசூல் செய்த எண்ட் கேம் திரைப்படம் தற்போதுவரை 300 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது உலகளவில் இப்படம் அதிகம் வசூல் செய்த படங்களின் டாப் 5 பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

முதல் இடத்தில் அவதார் உள்ள நிலையில் அந்த சாதனையும் இன்னும் ஒரு வாரத்தில் அவெஞ்சர்ஸ் முறியடித்துவிடும் என சொல்லப்படுகிறது.

மேலும் மூன்றாம் இடத்தில் ஸ்டார் வார்ஸ் நான்காம் இடத்தில் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் என இந்த பட்டியலில் மற்ற படங்கள் உள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.