Avarai Poriyal Recipe
Avarai Poriyal Recipe

Avarai Poriyal Recipe :

தேவையான பொருட்கள் :

1. அவரை – 1 கப்

2. வெங்காயம் – 1

3. தக்காளி – 1

4. இஞ்சி – சிறிது

5. மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்

6. மல்லி தூள், சீராக தூள், மிளகாய் தூள், மிளகு தூள் – 1 ஸ்பூன்

7. கடுகு, உளுந்து, சோம்பு – 1 ஸ்பூன்

8. கறிவேப்பிலை, மல்லி இலை – சிறிது

9. எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை :

கடாயில் எண்ணைய் விட்டு அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும் பிறகு அதில் தக்காளி போட்டு மீண்டும் வதக்க வேண்டும். பிறகு மஞ்சள் தூள், மல்லி தூள், சீராக தூள், மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும்.

மீண்டும் கடாயில் எண்ணைய் விட்டு அதில் கடுகு, உளுந்து, சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் 300 கிராம் அவரைக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு அதில் தண்ணீர் ஊற்றி அவரைக்காய் பாதி வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி விட வேண்டும். 5 நிமிடம் கழித்து மல்லி இலை தூவி இறக்கினால் சூடான அவரை பொரியல் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here