அவளுக்கென்ன அழகிய முகம் இயக்குனரின் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியள்ளது.

கதிரவன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கேசவன் இயக்கத்தில் கடந்த வருடத்தில் வெளியாகிய திரைப்படம் அவளுக்கென்ன அழகிய முகம்.

இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கேசவன் கவண் எண்டெர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தின் முதல் படத்தை இயக்க உள்ளார்.

தற்போதைக்கு இப்படத்திற்கு தற்காலிகமாக ப்ரொடக்ஷன் நம்பர் 1 என பெயரிடப்பட்டுள்ளது. வெகு விரைவில் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள், தொழிநுட்ப கலைஞர்களின் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

கவண் எண்டெர்டைன்மென்ட் நிறுவனத்துடன் கை கோர்த்த அவளுக்கென்ன அழகிய முகம் இயக்குனர்.!