Avaaram Flower
Avaaram Flower

Avaaram Flower : 1) ஆவாராம் பூ, பால் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு பலம் கூடும்.

2) தோல் பொன்னிறத்தை பெற ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

3) ஆவாரம் பூவுடன் பாசிப் பயறைச் சேர்த்து அரைத்து எரிச்சல் உள்ள பாகத்தில் தேய்த்துக் குளித்தால் எரிச்சல் குறையும்.

4) நெல்லிக்காய்,செம்பருத்திப் பூ, ஆவாரம் பூ,வெந்தயம் ஆகியவற்றை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி, தலையில் தேய்த்து குளிக்க உடல் வெப்பம் குறைந்து முடி நன்றாக வளர ஆரம்பிக்கும்.

5) தினமும் 5 ஆவாரம்பூ சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

6) ஆவாரம் பூவை பாலில் போட்டு காய்ச்சி தேன் கலந்து குடிக்க நீர்கடுப்பு குறையும்.

7) ஆவாரம் பூ, கறிவேப்பில்லை, நெல்லிக்காய் சேர்த்துச் சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும்.

8) ஆவாரம் பூக்களை எடுத்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி சூடான பாலில் கலந்து சிறிது சர்க்கரை போட்டு காலை, மாலை குடித்து வந்தால் நீர்க்கடுப்பு, பெரும்பாடு மற்றும் வெள்ளைப்படுதல் ஆகியவை குறையும்.

9) சிறிது நல்லெண்ணெய் விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து ஒருநாள் விட்டு ஒருநாள் கட்டிவர சர்க்கரை நோயால் ஏற்படும் குழிப்புண்கள் மாயாமாக மறையும்.

10) ஆவாரம் பூ மற்றும் அருகம்புல் வேரைபொடி செய்து நெய்யுடன் சாப்பிட மூலம் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here