ஆட்டோகிராப் படத்தில் நடிக்க இருந்த முன்னணி நடிகர் பற்றி பேசியுள்ளார் சேரன்.
Autograph Movie Secret : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக தரமான படங்களை கொடுத்து வருபவர் சேரன். இவரது நடிப்பில் வெளியான ஆட்டோகிராப் திரைப்படம் பல விருதுகளை பெற்றுக் கொடுத்தது.
ஆனால் இந்தப்படத்தில் சேரன் நடிக்கும் ஐடியாவே இல்லையாம். முதலில் படத்தின் கதையை தளபதி விஜயிடம் தான் கூறியுள்ளார்.
ஆனால் அப்போது விஜய் மற்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் இந்த படத்தை தவிர்த்துள்ளார். இதனால் தான் சேரன் இந்த படத்தில் நடித்துள்ளார்.
இதனை அவரே ஒரு பேட்டியிலும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.