Australia vs Bangladesh : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, Latest Sports News, Australia

Australia vs Bangladesh :

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாட்டிங்காமில் இன்று நடக்கும் 26-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் இந்தியாவுக்கு எதிராக கண்டுள்ளது.

பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் மூன்றிலும் வலுமிக்கதாக விளங்கும் ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை நீட்டிப்பதில் முனைப்பு காட்டும்.

டேவிட் வார்னர் (281 ரன்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் (343 ரன்), ஸ்டீவன் சுமித் (243 ரன்) ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்டிங்கின் முதுகெலும்பாக உள்ளனர். பந்து வீச்சில் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க் மிரட்டுகிறார்கள்.

உலக கோப்பை கிரிக்கெட் – விராட் கோலி நம்பிக்கை!

வங்காளதேச அணி 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளி பெற்றுள்ளது.

இதில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சி அளித்து வியப்பூட்டிய வங்காளதேச அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கும் சவாலாக இருக்கும். 2 சதம், 2 அரைசதம் உள்பட 384 ரன்கள் குவித்துள்ள ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் தான் அந்த அணியின் ஆணிவேராக இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டவுன்டானில் நடந்த ஆட்டத்தில் 322 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்த வங்காளதேச அணி ‘ஷாட்பிட்ச்’ பந்துவீச்சு தாக்குதலை திறம்பட சமாளித்து அசத்தியது.

ஆனால் இது அதைவிட பெரிய மைதானம் என்பதால் ஷாட்பிட்ச் பந்து வீச்சை எதிர்கொள்வதில் கூடுதல் கவனமுடன் இருப்பார்கள்.

மொத்தத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எல்லா வகையிலும் வங்காளதேசம் சவால் அளிக்க காத்திருப்பதால் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.