Australia Team
Australia Team

Australia Team :

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடியது.

அதன்பின் ஆஸ்திரேலியா இந்தியா வந்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்பின் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா இந்தியா வந்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட சம்மதம் தெரிவித்திருந்தது.

புத்தாண்டையொட்டு சிட்னியில் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்துடன் ஒருநாள் போட்டியில் விளையாட விரும்பியது.

இதன் காரணத்தால் பிசிசிஐ – யிடம் ஆஸ்திரேலிய நிர்வாகம் ஒருநாள் தொடரை முன்கூட்டியே நடத்த கோரிக்கை விடுத்தது.

ஆனால், பிசிசிஐ அதை மறுத்துவிட்டது. இதனால் நியூசிலாந்து உடனான தொடரை தள்ளிப்பட முடிவு செய்தது. ஆஸ்திரேலியாவின் முடிவை நியூசிலாந்த ஏற்றுக் கொண்டது.

இதனால் இந்தியா – ஆஸ்திரேலியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here