AUS won the Match : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, Australia won by 48 runs. Player of the Match - David Warner

AUS won the Match :

ஆஸ்திரேலியா – வங்காள தேச அணிகள் இடையேயான உலகக்கோப்பை தொடரின் 26-வது லீக் ஆட்டம் நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 381 ரன் எடுத்தது. அதிக பட்சமாக வார்னர் 166 ரன்னும், ஆரோன் பிஞ்ச் (53) கவாஜா (89) ரன்னும் எடுத்தனர். ENT

பின்னர் 382 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேச அணி பேட்டிங்கை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக தமிம் இக்பாலும், சவுமியா சர்காரும் ஆடினர். சவுமியா சர்கார் 10 ரன் அடித்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெறியேறினார்.

மே.இந்திய தீவுகளை சமாளிக்குமா தென்.ஆப்பிரிக்கா? கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் இன்று பலப்பரீட்சை !

அடுத்து வந்த ஷகிப் அல் ஹசன் 41 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதைத்தொடர்ந்து வந்த முஷ்பிகுர் ரஹிம் தமிம் இக்பாலுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். இருவரும் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தனர்.

தமிம் இக்பால் அரை சதம் அடித்த சிறிது நேரத்தில் அவுட் ஆனார். அவர் 62 ரன் எடுத்தார். அடுத்து வந்த லிட்டான் தாஸ் 20 ரன்னிலும், மக்முதுல்லா 69 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இறுதியில் வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 333 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 48 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.