ப்ளூ சட்டை மாறனின் ஆன்ட்டி இந்தியன் திரைப்படத்திற்கு சென்சார் குழு எத்தனை கட் போட்டு இருக்கு என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

Aunty Indian Censor Issue : தமிழ் சினிமாவில் சிறிய நடிகர்கள் முதல் டாப் ஹீரோக்கள் வரை யார் நடிப்பில் வந்த படம் வெளியானாலும் அதனை மோசமாக விமர்சித்து ரசிகர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய ஒருவராக பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன்.

இவருடைய விமர்சனங்களால் கடுப்பான ரசிகர்கள் முடிந்தால் உங்கள் ஒரு படத்தை இயக்கி காட்டுங்கள் என சவால் விட அந்த சவாலை ஏற்று தற்போது ஒரு படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்திற்கு ஆன்ட்டி இந்தியன் என பெயர் வைத்துள்ளார். படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. அதில் சவப்பெட்டியின் மீது ஆட்சி நடப்பது போலவும் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய படியும் அந்த மோஷன் போஸ்டர் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் குழு மொத்தம் 38 இடங்களில் கத்தரி போட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தின் டைட்டிலை மாற்றினால்தான் சென்சார் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல புதிய இந்த படத்தை நேரடியாக எந்தவித கட்டும் இன்றி OTT வழியாக வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.