ஆகஸ்ட் 16 1947 படத்தின் விமர்சனம் குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கௌதம் கார்த்திக். இவரது நடிப்பில் வெளியான பத்து தலை திரைப்படத்தில் நல்ல நடிப்பை கொடுத்திருந்த நிலையில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் ஆகஸ்ட் 16, 1947.

ஏ ஆர் முருகதாஸிடம் எட்டு வருடங்கள் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ் பொன்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் கதைக்களம் :

வெளி உலகத் தொடர்பை கிடையாது செங்காடு என்ற கிராமத்தில் ராபர்ட் கிளைவ் என்ற ஆங்கிலேயர் அங்கு இருக்கும் மக்களை அடிமைப்படுத்தி 16 மணி நேரம் சிறுநீர் கழிக்க கூட விடாமல் வேலை வாங்குகிறார். அவருடைய மகன் ஜஸ்டின் கண்ணில் பட்ட பெண்களை எல்லாம் பாலியல் வன்கொடுமை செய்து வருகிறார்.

இப்படியான நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கிறது. ஆனால் இந்த விஷயத்தை அந்த ஊர் மக்களிடம் இருந்து மறைக்கிறார் ராபர்ட் கிளைவ். இந்த ராபர்ட் கிளைவ் குடும்பத்துக்கு உடந்தையாக இருந்து வருகிறார் அந்த ஊர் ஜமீன்தாரர்.

கடைசியில் அந்த ஜமீன்தாரின் மகளையும் அடைய ஆசைப்படுகிறான். இந்த விஷயம் அறியும் ஜமீன்தார் மகளை ஒரு தடையாக காதலிக்கும் பரமே ஜஸ்டின் எதிர்த்து அவனை கொலை செய்கிறான். இதை அறிந்த ராபர்ட் ‌‌ பரமுவை பழி தீர்க்க கிளம்புகிறான். இப்படியான நிலையின் அடுத்து நடந்தது என்ன செங்காடு மக்களுக்கு விடுதலை கிடைத்ததா? பரமு நிலை என்ன ஆச்சு? என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

பரமு என்ற கதாபாத்திரத்தில் யதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் கௌதம் கார்த்திக்.

மதராசப்பட்டினம் படத்துக்கு அடுத்ததாக சுதந்திரம் கிடைத்த காலகட்டதுக்கு ஏற்ற கதையும் உடை என அனைத்தும் பார்ப்போரை கவர்கிறது.

படத்தில் இடம் பெறும் அரண்மனை முதல் கூரை வீடு வரை அனைத்தும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. ‌‌

படத்தின் இயக்குனர் பொன் குமார் வித்யாசமான கதையை கையில் எடுத்து அதை அழகான படைப்பாக மக்களிடம் கொடுத்துள்ளார்.

REVIEW OVERVIEW
ஆகஸ்ட் 16, 1947
august-16-1947-movie-reviewமொத்தத்தில் ஆகஸ்ட் 16, 1947 சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்து.