Attama Siddhi : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, ஆன்மிகம், அபூர்வ தகவல்கள், ஆன்மிகம், Maharishi Bhrigu

Attama Siddhi :

▪ நமது முன்னோர்கள் சிலர் வியக்கத்தக்க சித்திகளை தங்களது முயற்சியால் அடைந்தார்கள். உடம்பே ஆலயம் உயிரே ஆண்டவன்’ என அறிந்துகொண்டதனால், `சித்தர்கள்’ ஆனார்கள்.

`உடம்பின் சூட்சுமங்களை அறிந்துகொண்டு, தவத்தாலும் தகுந்த மூலிகைகளைக் கொண்டும் அவர்கள் அட்டமா சித்திகளை அடைந்தார்கள்’ என சில நூல்கள் குறிப்பிடுகின்றன.

▪ அட்டமா சித்திகள் விளக்கம்:

1) அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.

2) மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.

3) இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.

வாரியார் சொன்ன கற்பூர கதையின் மூலம் வாரியார் கூறுவது என்ன? தெரியுமா உங்களுக்கு?

4) கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.

5) பிராப்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.

6) பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல்.

7) ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.

8) வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here