நடிகர் விஷால் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளோடு வலம் வருபவர் விஷால். இவர் தற்போது லத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

விஷால் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்.. வெளியான அதிர்ச்சி போட்டோ.!!

நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் சென்னை அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார், கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி இரவு சிவப்பு நிற காரில் வந்த சிலர் நடிகர் விஷால் வீட்டினை கற்கள் கொண்டு தாக்கியுள்ளனர். இதில், விஷாலின் வீட்டு கண்ணாடிகள் சேதமாகியுள்ளன.

இவை அனைத்தும் விஷால் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. படப்பிடிப்பிற்காக நடிகர் விஷால் வெளியூர் சென்றுள்ள சூழ்நிலையில் இந்த தாக்குதல் நடைப்பெற்றுள்ளது.

விஷால் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்.. வெளியான அதிர்ச்சி போட்டோ.!!

இதனையடுத்து நடிகர் விஷால் சார்பில் அவரின் மேலாளர் திரு.ஹரிகிருஷ்ணன் சென்னை கே4 அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றும் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.