Atlee With Rajinikanth Photo

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் இயக்குனர் அட்லி பணியாற்றிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

Atlee With Rajinikanth Photo : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. ஜெய் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி என்று படத்தின் மூலமாக திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். மேலும் இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். ரஜினிகாந்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அப்போது அட்லி பார்ப்பதற்கு குச்சி போல் இருந்துள்ளார்.